மும்பையில் மட்டும் 15 லட்சம் பேருக்கு கொரோனா? பீதியை கிளப்பும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.

 

மும்பையில் மட்டும் 15 லட்சம் பேருக்கு கொரோனா? பீதியை கிளப்பும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி விட்டது. மகாராஷ்டிராவில் தொற்று நோயான கொரோனா வைரஸ் தனது ருத்ரதாண்டவத்தை காட்டி வருகிறது. அந்த மாநிலத்தில் கொரோனாவால் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த தொற்றுநோய்க்கு 1,249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக உள்ளது.

மும்பையில் மட்டும் 15 லட்சம் பேருக்கு கொரோனா? பீதியை கிளப்பும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.

இந்த சூழ்நிலையில் மும்பையில் மட்டும் 15 லட்சம் பேருக்கு கொரோனா இருப்பதாக சலசலப்பு கேட்பதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார். இது தொடர்பா அவர் டிவிட்டரில், மும்பையில் 15 லட்சம் பேருக்கு கொரோனா உள்ளது??? இது உண்மை இல்லை என யாராவது உறுதி செய்யமுடியுமா?? மற்றும் அதனை நிரூபியுங்க!! மவுனம், ஏனெனில் அது பி.எம்.சி.யில் உள்ள சலசலப்பு!! இறுதியில் எப்போது வேண்டுமானாலும் எங்களும் தெரியும்போது ஏன் மறைக்க வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் மும்பை மாநகராட்சியால் நிர்வகிக்கப்படும் சியோன் மருத்துவமனையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில், கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் உடல்கள் பேக்கில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த வீடியோவை பா.ஜ.க. எம்.எல்.ஏ. நிதேஷ் ரானே தனது டிவிட்டரில் வெளியிட்டு அதனை அனைவருக்கும் தெரியும்படி செய்து  முதல்வர் உத்தவ் தாக்கரே அரசுக்கு குடைச்சல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மும்பையில் 15 லட்சம் பேருக்கு இருப்பதாக பேசப்படுகிறது என கூறி மீண்டும் மகாராஷ்டிரா அரசுக்கு நிதேஷ் ரானே நெருக்கடி கொடுத்துள்ளார்.மும்பையில் மட்டும் 15 லட்சம் பேருக்கு கொரோனா? பீதியை கிளப்பும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.