புகழ் குறைந்து வருவதால் இது போன்ற அறிக்கைகளை உத்தவ் தாக்கரே வெளியிடுகிறார்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ. தாக்கு

புகழ் குறைந்து வருவதால் இது போன்ற அறிக்கைகளை உத்தவ் தாக்கரே வெளியிடுகிறார்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ. தாக்கு

புகழ் குறைந்து வருவதால் இது போன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.

கர்நாடக அரசு பெலாகவி மாவட்டத்தின் பெயரை பெல்காம் என்று கடந்த சில தினங்களுக்கு முன் பெயர் மாற்றம் செய்தது. இதற்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, பெலாகவி மாவட்டம் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும்போது, வேண்டும் என்றே மாவட்டத்தின் பெயரை கர்நாடக அரசு பெயரை மாற்றியதாக குற்றம் சாட்டினார். மேலும், பெலாகவி மாவட்டத்தை மகாராஷ்டிராவின் ஒரு பகுதியாக மாற்றுவதாக மிரட்டல் விடுத்தார்.

புகழ் குறைந்து வருவதால் இது போன்ற அறிக்கைகளை உத்தவ் தாக்கரே வெளியிடுகிறார்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ. தாக்கு
ஈஸ்வரப்பா

உத்தவ் தாக்கரேவின் கருத்துக்கு கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பா இது குறித்து கூறுகையில், முதல்வரின் (உத்தவ் தாக்கரே) புகழ் குறைந்து வருகிறது. அதனால்தான் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார். கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா நாங்கள் அனைவரும் சகோதரர்கள். மகாராஷ்டிரா முதல்வர் என்ன சொன்னாலும் நாங்கள் கண்டிக்கிறோம். அனைத்து மாநிலங்களும் இந்தியாவின் ஒரு பகுதி மற்றும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று தெரிவித்தார்.

புகழ் குறைந்து வருவதால் இது போன்ற அறிக்கைகளை உத்தவ் தாக்கரே வெளியிடுகிறார்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ. தாக்கு
சசிகலா ஜோல்லே

மற்றொரு கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. சசிகலா ஜோல்லே கூறுகையில், இந்த மகாராஷ்டிரா முதல்வர் என்ன சொல்கிறார்?. அவர் வழியிலேயே கர்நாடகா மும்பை மற்றும் சோலாப்பூரை எங்களுடையது என்று கூறலாம். நாம் இணக்கமாக இருக்க வேண்டும். நம்மிடம் அவர்களின் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள், நம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அங்கு (மகாராஷ்டிராவில்) வாழ்கிறார்கள், அதனால் என்ன பிரச்சினை? என்று தெரிவித்தார்.