கொரோனாவுக்கு பாஜக பெண் எம்எல்ஏ பலி!

 

கொரோனாவுக்கு பாஜக பெண்  எம்எல்ஏ பலி!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ராஜ்சமந்த் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. கிரண் மகேஷ்வரி காலமானார். அவருக்கு வயது 59.

கொரோனாவுக்கு பாஜக பெண்  எம்எல்ஏ பலி!

கடந்த 1994ம் ஆண்டு நடந்த நகராட்சி கவுன்சிலர், அதை தொடர்ந்து 5 ஆண்டுகள் மேயர் பதவி, பாஜகவில் ராஜஸ்தான் மகளிர் அணியின் தலைவர் என பல பொறுப்புக்களை வகித்துள்ளார். இதையடுத்து கடந்த 2006ம் ஆண்டு மகளிர் அணி தேசிய தலைவராக பதவியேற்ற இவர் அக்கட்சியின் தேசிய பொது செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அதேபோல் உதய்பூர்-ராஜ்சமந்த் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இதை தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜ்சமந்த் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.

கொரோனாவுக்கு பாஜக பெண்  எம்எல்ஏ பலி!

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், ஹரியானா குருகிராமில் உள்ள மேதாந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.