பி.எஸ். எடியூரப்பா ரொம்ப நாளைக்கு முதல்வர் பதவியில் இருக்க மாட்டார்… வெளிப்படையாக தெரிவித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.

பி.எஸ். எடியூரப்பா ரொம்ப நாளைக்கு முதல்வர் பதவியில் இருக்க மாட்டார்… வெளிப்படையாக தெரிவித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.

கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா நீண்ட காலம் அந்த பதவியில் இருக்க மாட்டார் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக முதல்வர் பதவியிலிருந்து பி.எஸ். எடியூரப்பா நீக்கப்படுவார் என ஒரு பேச்சு அடிபட்டு வந்தது. ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சில பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். இருந்தாலும் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவுக்கு எதிராக பா.ஜ.க.வில் ஒரு தரப்பினர் தெரிவிப்பு தொடங்கி இருப்பது மறைமுகமாக தெரிந்தது.

பி.எஸ். எடியூரப்பா ரொம்ப நாளைக்கு முதல்வர் பதவியில் இருக்க மாட்டார்… வெளிப்படையாக தெரிவித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.
முதல்வர் பி.எஸ். எடியூரப்பா

இந்த சூழ்நிலையில் விஜயபுராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பசன்கவுடா பாட்டீல் யட்னல் பேசுகையில், முதல்வர் பி.எஸ். எடியூரப்பா நீண்ட காலம் அந்த பதவியில் இருக்க மாட்டார், விரைவில் மாற்றப்படுவார் என வெளிப்படையாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: மாநிலத்தில் பெரும்பாலான மூத்த தலைவர்களுக்கும் முதல்வருக்கும் தொடர்பு நல்லவிதமாக இல்லை என்பதால் அவர் விரைவில் மாற்றப்படுவார்.

பி.எஸ். எடியூரப்பா ரொம்ப நாளைக்கு முதல்வர் பதவியில் இருக்க மாட்டார்… வெளிப்படையாக தெரிவித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.
பசன்கவுடா பாட்டீல் யட்னல்

மாநிலத்தில் அடுத்த முதல்வராக வடக்கு கர்நாடகா பகுதியை சேர்ந்தவர் இருப்பார் என பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளார். வடக்கு கர்நாடக பகுதி மக்கள்தான் பா.ஜ.க.வின் 100 எம்.எல்.ஏ.க்களை வெற்றி பெற செய்து ஆட்சியை பிடிக்க செய்தனர். அதன் பிறகுதான் எடியூரப்பா முதல்வராகினார். மாண்ட்யா மற்றும் இதர தெற்கு கர்நாடக மாவட்டங்கள் அவரை முதல்வராக ஆக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தனது சிவமுகா தொகுதியில் மட்டும் அனைத்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்கிறார். அதேசமயம் மற்ற தொகுதிகளுக்கான வளர்ச்சியை நிதியை திரும்ப பெற்றுள்ளதாக அவர் மீது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்ட தொடங்கியுள்ளனர்.