“அம்மா குடி மனநோயாகிவிட்டது; மதுக்கடையை திறங்கள்” – ஆளுநர் தமிழிசைக்கு போன் அடித்த பாஜக எம்எல்ஏ!

“அம்மா குடி மனநோயாகிவிட்டது; மதுக்கடையை திறங்கள்” – ஆளுநர் தமிழிசைக்கு போன் அடித்த பாஜக எம்எல்ஏ!

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் மதுக்கடைகள் மூடியிருப்பதால், மதுப்பிரியர்கள் மது குடிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இச்சூழலில் மதுக்கடைகளைத் திறக்கக் கோரி பாஜக எம்எல்ஏ ஜான்குமார் பேசிய ஆடியோ பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பில் அந்த ஆடியோ வேகமாகப் பரவி வருகிறது.

“அம்மா குடி மனநோயாகிவிட்டது; மதுக்கடையை திறங்கள்” – ஆளுநர் தமிழிசைக்கு போன் அடித்த பாஜக எம்எல்ஏ!

அந்த ஆடியோவில் பேசியுள்ள ஜான் குமார், “எனது தொகுதியில் மது கிடைக்காமல் சானிடைசர் குடித்து ஒருவர் அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டார். மனவருத்தம் அடைந்து, ஆளுநரை (தமிழிசை) தொடர்புகொண்டு பேசினேன். அப்போது அவரிடம், “அம்மா, குடி மனநோயாகிவிட்டது. வியாதிக்கு மருந்து கொடுப்பதாக எண்ணி மதுக்கடையைத் திறங்கள். மதுவுக்குப் பலரும் அடிமையாகிவிட்டனர். சிலர் தவறான முறையில் போதைக்காக சில பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்” என்றேன்.

“அம்மா குடி மனநோயாகிவிட்டது; மதுக்கடையை திறங்கள்” – ஆளுநர் தமிழிசைக்கு போன் அடித்த பாஜக எம்எல்ஏ!

அதற்கு ஆளுநரும், கடையைத் திறக்க ஆவன செய்வதாகக் குறிப்பிட்டார். தயவுசெய்து மதுவால் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குடிக்கு அடிமையாகாமல் கொஞ்சமாக மது வாங்கி வியாதிக்கு மட்டும் குடியுங்கள்” என்றார்.