தமிழக கால்பந்து அணிக்கு தேர்வான மொடக்குறிச்சி மாணவிக்கு, பாஜக எம்எல்ஏ நேரில் பாராட்டு!

 

தமிழக கால்பந்து அணிக்கு தேர்வான  மொடக்குறிச்சி மாணவிக்கு, பாஜக எம்எல்ஏ நேரில் பாராட்டு!

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இருந்து தமிழக கால்பந்து அணிக்கு தேர்வாகி உள்ள கல்லூரி மாணவிக்கு, பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி நேரில் வாழ்த்து தெரிவித்தார்/

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் வடுகபட்டியை அடுத்த வினோபநகரை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் அபிராமி (17). சிறு வயது முதலே கால்பந்து விளையாட்டில் தீராத மோகம் கொண்டிருந்த இவருக்கு, கால்பந்து வீரரான அவரது அண்ணன் விஷ்ணு முறையான பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். இதனால் அபிராமிக்கு விரைவிலேயே பெங்களூரு பிரேவ்ஸ் கால்பந்து கிளப்பில் இடம் கிடைத்து, அந்த அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

தமிழக கால்பந்து அணிக்கு தேர்வான  மொடக்குறிச்சி மாணவிக்கு, பாஜக எம்எல்ஏ நேரில் பாராட்டு!

அபிராமியின் திறமையை அடையாளம் கண்ட தமிழ்நாடு கால்பந்து கழகம், அவருக்கு மிக இளையோர் பெண்கள் கால்பந்து தமிழக அணிக்கு தேர்வு செய்து, விளையாடும் வாய்ப்பு கிட்டியது. தொடர்ந்து, 19 வயதுக்கு உள்பட்டோர் அணிக்காக இரு முறையும், தற்போது மூத்தோருக்கான பெண்கள் கால்பந்து அணிக்காகவும் தேர்வாகி உள்ளார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் இருந்து தேர்வாகி உள்ள ஒரே பெண் கால்பந்து வீராங்கனை அபிராமி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, வரும் செப்டம்பர் 2 முதல் 5ஆம் தேதி வரை கோவாவில் நடைபெறும் அகில இந்திய பெண்கள் கால்பந்து போட்டியில் தமிழக அணிக்காக விளையாட உள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, மிகவும் கடினமான கால்பந்து போட்டியில் முத்திரை பதிக்க காத்திருக்கும் இளம் வீராங்கனையான அபிராமிக்கு, மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி நேரில் வாழ்த்து தெரிவித்து, ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்கினார்.