நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக கூட்டத்தில் தீர்மானம்!

 

நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக கூட்டத்தில் தீர்மானம்!

நீட், ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவு ஆகியவற்றுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞரணி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக கூட்டத்தில் தீர்மானம்!

மத்திய அரசு கொண்டு வரவுள்ள ஒளிப்பதிவு திருத்த மசோதா  மூலம் தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும், அத்துடன் திரைப்பட திருட்டுக்கு கடுமையான சிறை தண்டனை , அபராதம் உள்ளிட்டவை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .அதேசமயம் மத்திய அரசு நினைத்தால் ஒரு படத்தை தடை செய்யவும் இந்த புதிய மசோதாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் காரணமாக இந்த மசோதாவிற்கு நடிகர் கமல் ஹாசன், நடிகர் சூர்யா,நடிகர் கார்த்தி, அனுராக் காஷ்யப், வெற்றிமாறன், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல…என்று காட்டமாக பதிவிட்டார்.

நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக கூட்டத்தில் தீர்மானம்!

இந்நிலையில் பாஜகஅலுவலகமான சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில இளைஞரணியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் கலந்துகொண்ட நிலையில், நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டம், ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரிவித்தும் நடிகர் சூர்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அத்துடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் வார்த்தையை கொச்சைப்படுத்திய எம்எல்ஏ ஈஸ்வரன், மற்றும் அதை கண்டுகொள்ளாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நடிகர் சூர்யா இந்திய இறையாண்மையை கொச்சைப்படுத்தி வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.