‘எல்.முருகன் ஜெயிக்க’.. அமித்ஷா போட்ட திட்டம் : சட்டமன்றம் கனவு பலிக்குமா?

 

‘எல்.முருகன் ஜெயிக்க’.. அமித்ஷா போட்ட திட்டம் : சட்டமன்றம் கனவு பலிக்குமா?

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 20 தொகுதிகளில் போட்டியிட்டாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லையென்றே கணிப்புகள் சொல்கின்றன. அந்த அளவுக்கு பாஜகவுக்கு எதிர்ப்பு இருக்கிறதாம். பாஜக மீது இருக்கும் மக்களின் கோபத்துக்கு, தூபம் போட்டது போல் அமைந்தது அதன் தேர்தல் அறிக்கை. மாட்டிறைச்சி தடை, தமிழ்நாடு பெயர் மாற்றம், மதமாற்ற தடை சட்டம் என வாக்குறுதிகள் அனைத்துமே மக்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பும் வகையில் அமைந்தது. இதனால், தமிழக பாஜகவினர் திண்டாடி போயுள்ளனர்.

‘எல்.முருகன் ஜெயிக்க’.. அமித்ஷா போட்ட திட்டம் : சட்டமன்றம் கனவு பலிக்குமா?

பாஜகவுக்கு நம்பிக்கையாக இருப்பது 3 தொகுதிகள் தான். அவை, வானதி சீனிவாசன் போட்டியிடும் கோவை தெற்கு, எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம், குஷ்பு போட்டியிடும் ஆயிரம் விளக்கு. இதில் கோவை தெற்கும், ஆயிரம் விளக்கும் கூட டவுட் தான். காரணம், ஆயிரம் விளக்கு திமுகவின் கோட்டை. கோவை தெற்கில் வானதிக்கு எதிராக கமல்ஹாசன் போட்டியிடுகிறார். பாஜக நம்பியிருந்த 3 தொகுதிகளுள் 2 தொகுதிகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டதால், பாஜக தனது முழு கவனத்தை தாராபுரம் பக்கம் திருப்பியுள்ளது.

‘எல்.முருகன் ஜெயிக்க’.. அமித்ஷா போட்ட திட்டம் : சட்டமன்றம் கனவு பலிக்குமா?

எப்படியாவது எல்.முருகனை சட்டமன்றத்துக்குள் அனுப்பி விட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக கர்நாடகா மற்றும் டெல்லியில் இருந்து ஒரு மாஸ்டர்மைண்ட் குழு களமிறக்கப்பட்டுள்ளதாம். அந்த குழு எல்.முருகனுக்காக இறங்கி வேலை செய்துக் கொண்டிருக்கிறதாம். அமித்ஷாவே இந்த குழுவை அனுப்பியிருப்பதாக தெரிகிறது. எல்.முருகனின் வெற்றியை மானப் பிரச்னையாக நினைத்துக் கொண்டிருக்கும் பாஜக, அல்லது மீண்டும் மண்ணைக் கவ்வுகிறதா? நினைத்ததை சாதிக்கிறதா? என்பதை பொருந்திருந்து பார்க்கலாம்..!