கோவில்களுக்கு தனி வாரியம்; 18-23 வயது வரையிலான பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமை- பாஜக வாக்குறுதி

கோவில்களுக்கு தனி வாரியம்; 18-23 வயது வரையிலான பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமை- பாஜக வாக்குறுதி

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான, பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் விகே சிங், மாநில பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பாஜக தேர்தல் அறிக்கையில், “8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லெட் வழங்கப்படும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.18 முதல் 23 வயது வரை உள்ள இளம்பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம். விவசாயத்திற்கு அதிக நிதி ஒதுக்கீட்டுடன், தனிபட்ஜெட் போடப்படும்.

கோவில்களுக்கு தனி வாரியம்; 18-23 வயது வரையிலான பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமை- பாஜக வாக்குறுதி

சென்னை மாநகரம், 3 நகராட்சிகளாக பிரிக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ள தடை. சட்டமேலவை மீண்டும் கொண்டுவரப்படும். ரேஷன்பொருட்கள் வீடு தேடி விநியோகிக்கப்படும். மீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படும். 50 லட்சம் புதிய வேலைவாப்புகள் உருவாக்கப்படும். 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு, பட்டியலின மக்களிடம் வழங்கப்படும். இந்து கோவில்களின் நிர்வாகம் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்” ஆகிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.