மணிப்பூரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க. வெற்றி.. சட்டசபையில் சேர்களை வீசி எறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

மணிப்பூரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க. வெற்றி.. சட்டசபையில் சேர்களை வீசி எறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் தற்போது முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது. 2017ல் அம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி பெரும் கட்சியாக அதிக இடங்களில் வென்றது. இருப்பினும் பா.ஜ.க. மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி பிடித்தது. இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் எதிர்க்கட்சியான காங்கிரஸ் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது.

மணிப்பூரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க. வெற்றி.. சட்டசபையில் சேர்களை வீசி எறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

இது தொடர்பான நோட்டீசை சபாநாயகரிடம் காங்கிரஸ் வழங்கியது. ஆனால் காங்கிரஸ் அளித்த நம்பிக்கையில்லா தீர்மான கோரிக்கை  நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், முதல்வர் பைரன் சிங் நேற்று சட்டப்பேரவையின் ஒருநாள் சிறப்பு கூட்டத்தொடரில் தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். நேற்று சட்டப்பேரவையில் பா.ஜ.க.வின் 28 எம்.எல்.ஏ.க்களும் ஆஜராகினர். அதேசமயம் காங்கிரசில் 16 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சபைக்கு வந்தனர். 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை.

மணிப்பூரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க. வெற்றி.. சட்டசபையில் சேர்களை வீசி எறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின், தங்களது அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தற்காக அவருக்கு  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் மற்றும் சட்டப்பேரவையின் மத்தியில் சேர்களை வீசி எறிந்தனர்.