ஆல் ஓவர் இந்தியாவை வளைத்துப்போட்ட பாஜக!

 

ஆல் ஓவர் இந்தியாவை வளைத்துப்போட்ட பாஜக!

குஜராத்தில் நடைபெற்ற 8 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக 7 இடங்களில் வெற்றி பெற்று ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. ஆனால் அதே நேரம்ஹரியானாவின் பரோடா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

கர்நாடாகாவில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றிப்பெற்றுள்ளது. அதேபோல் தெலுங்கானாவின், துபாக்கா சட்டப்பேரவை இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான டி.ஆர்.எஸ் கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது. பீகார் சட்டப்பேரவை தேர்தல் 93 தொகுதிகளின் முடிவுகள் தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பாஜக கூட்டணி – 48 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி – 40 மற்றும் பிற கட்சிகள் – 5 இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளன. உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளில் சமாஜ்வாதி ஒரு இடத்தில் வெற்றியும், பாஜக 4 இடத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2 இடத்தில் முன்னிலையிலும் உள்ளது.

ஆல் ஓவர் இந்தியாவை வளைத்துப்போட்ட பாஜக!

மணிப்பூர் இடைத்தேர்தல் முடிவுகளின் படி காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. மாறாக பாஜக 3 இடங்களில் வெற்றியும் ஒரு இடத்தில் முன்னிலையும் பெற்றுள்ளது. மத்திய பிரதேசம் 28 தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக 10 இடங்களில் வெற்றியும் 9 இடத்தில் முன்னிலையும் பெற்றுள்ளது. மாறாக காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி, 8 இடத்தில் முன்னிலையில் உள்ளது. ஆக மொத்தம் பாஜகவே பல மாநிலங்களில் காலூன்றியிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.