Home அரசியல் பா.ஜ.க தலைவரின் குண்டர்கள் பாசம்… புலம்பும் அசல் பா.ஜ.க தொண்டர்கள்!

பா.ஜ.க தலைவரின் குண்டர்கள் பாசம்… புலம்பும் அசல் பா.ஜ.க தொண்டர்கள்!

பா.ஜ.க தலைவரின் குண்டர்கள் பாசம்… புலம்பும் அசல் பா.ஜ.க தொண்டர்கள்!
பண்டாரம் பரதேசி கட்சி என்று தி.மு.க-வால் கிண்டல் செய்யப்பட்ட கட்சியாக இருந்தாலும் மக்கள் மத்தியில் ஒரு கவுரவம் பா.ஜ.க-வுக்கு இருந்தது. அது தற்போது முற்றிலும் சிதைந்துவிட்டதாக பா.ஜ.க உண்மைத் தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.

பா.ஜ.க தலைவரின் குண்டர்கள் பாசம்… புலம்பும் அசல் பா.ஜ.க தொண்டர்கள்!
பா.ஜ.க தலைவரின் குண்டர்கள் பாசம்… புலம்பும் அசல் பா.ஜ.க தொண்டர்கள்!

தமிழக பா.ஜ.க-வில் அதிக அளவில் மாற்றுக் கட்சியினர், குற்ற பின்னணி கொண்டவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கட்சியில் இணைந்த ஒரு சில நாட்களிலேயே பதவியும் பெற்றுவிடுகிறார்கள். இதெல்லாம் உட்கட்சி விவகாரம் என்று வெளியே வீரமாகப் பேசினாலும், உள்ளுக்குள் புகைச்சல் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

பா.ஜ.க தலைவரின் குண்டர்கள் பாசம்… புலம்பும் அசல் பா.ஜ.க தொண்டர்கள்!

புதிதாக இணைந்தவர்களுக்கு கட்சியில் பதவி வழங்குவது பற்றி சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான நாராயணன் இது முழுக்க முழுக்க எங்கள் கட்சியின் உள் விவகாரம். எங்கள் கட்சியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பணிகள் வழங்கப்படுகிறது. இதில் என்ன தவறு உள்ளது. புதிதாக வந்தவர்களுக்கு பதவி வழங்கப்படுவதால் கட்சிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை” என்றார்.

பா.ஜ.க தலைவரின் குண்டர்கள் பாசம்… புலம்பும் அசல் பா.ஜ.க தொண்டர்கள்!

இது தொடர்பாக பா.ஜ.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். முதலில் எந்த வருத்தமும் அதிருப்தியியும் இல்லாதது போலவே விளக்கம் அளித்தனர். கடைசியில் ஒரு காலத்தில் மயிலாப்பூர், நங்கநல்லூர் கட்சி என்ற பெயர் இருந்தது. டீசன்டான கட்சி என்று ஓட்டுப் போட்டார்கள். இப்படி ரவுடிகளை சேர்ப்பதால் பரபரப்பாக பேசப்படலாம், ஆனால் இதுவரை விழுந்த ஓட்டு இனி கிடைக்குமா என்று தெரியவில்லை.

பா.ஜ.க தலைவரின் குண்டர்கள் பாசம்… புலம்பும் அசல் பா.ஜ.க தொண்டர்கள்!

முன்பு மாநிலத் தலைவர்களாக இருந்த சிலர் சாதி பாசத்தோடு இருந்தார்கள். முருகனுக்கு சாதி பாசம் இல்லை என்று கூறிவிட முடியாது, ஆனால் அதை வைத்து அவரிடம் எளிதில் பதவி உள்ளிட்ட சலுகைகள் பெற்றுவிட முடியாது. அதே நேரத்தில் குற்றப் பின்னணி உள்ளவர்களை கட்சியில் சேர்த்துக் கொண்டே வருவது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.

பா.ஜ.க தலைவரின் குண்டர்கள் பாசம்… புலம்பும் அசல் பா.ஜ.க தொண்டர்கள்!

மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாத காலத்திலிருந்து கட்சிப் பணியில் ஈடுபட்டு வருவபவர்களுக்கு சமீபத்திய செயல்பாடுகள் அதிருப்தியை அளித்துள்ளது உண்மைதான். ஆட்சியில் உள்ளோம், அதிகாரம் உள்ளது என்பதால் பலரும் வருகிறார்கள். நாளை ஒரு பாதிப்பு என்றால் வந்த வேகத்தில் சென்றுவிடுவார்கள், அப்போதும் பழைய உண்மையான தொண்டர்கள் மட்டும்தான் உடன் இருப்பார்கள். இதைத் தலைமை உணர வேண்டும்” என்றனர்.

பா.ஜ.க தலைவரின் குண்டர்கள் பாசம்… புலம்பும் அசல் பா.ஜ.க தொண்டர்கள்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

ஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை?- சத்குரு அதிரடி

ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற 3 நாள் யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும்...

17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி கைது

சேலம் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக வார்டு கவுன்சிலர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்.
- Advertisment -
TopTamilNews