ராகுல் காந்தி தனது கட்சியில் இளம் தலைவர்களை வளர விடமாட்டார்… உமா பாரதி தாக்கு

ராகுல் காந்தி தனது கட்சியில் இளம் தலைவர்களை வளர விடமாட்டார்… உமா பாரதி தாக்கு

ராஜஸ்தானில் நிலவும் அரசியல் சச்சரவு தொடர்பாக பா.ஜ.க. தலைவர் உமா பாரதி கூறியதாவது: ராஜஸ்தானில் தற்போது என்ன நடந்து கொண்டு இருக்கும் மற்றும் மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்வுகளுக்கும் ராகுல் காந்திதான் பொறுப்பு. காங்கிரசில் இளம் தலைவர்களை அவர் வளர விடமாட்டார். அவரால் தனது கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லை அப்புறம் எங்களை (பா.ஜ.க.) குற்றச்சாட்டுகிறார்.

ராகுல் காந்தி தனது கட்சியில் இளம் தலைவர்களை வளர விடமாட்டார்… உமா பாரதி தாக்கு

ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் போன்ற படித்த மற்றும் திறமையான தலைவர்கள் உயர் பதவிகளை பெற்றால் தாம் பின்தங்கிவிடுவோம் என அவர் (ராகுல் காந்தி) கருதுகிறார். காங்கிரசின் பொறாமை இதுதான், இதற்கெல்லாம் நாங்கள் பொறுப்பல்ல. அவர்கள் எங்களுடன் வரும்போது, அவர்கள் திறமையானவர்கள் நாங்கள் அவர்களை வரவேற்போம்.

ராகுல் காந்தி தனது கட்சியில் இளம் தலைவர்களை வளர விடமாட்டார்… உமா பாரதி தாக்கு

காங்கிரசின் வீழ்ச்சிக்கு பின்னால் ராகுல் காந்தியின் பொறாமை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் தற்போது வெளிப்படையாக வெடிக்க தொடங்கியுள்ளது. சச்சின் பைலட் காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைய போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.