டிராக்டரில் நடிகராக மாற முயற்சிக்கும் ராகுல் காந்தி… பா.ஜ.க. அமைச்சர் தாக்கு..

 

டிராக்டரில் நடிகராக மாற முயற்சிக்கும் ராகுல் காந்தி… பா.ஜ.க. அமைச்சர் தாக்கு..

விவசாயிகளுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் விதத்தில் பல பகுதிகளில் ராகுல் காந்தி டிராக்டர் ஒட்டுவதை, டிராக்டரில் நடிகராக மாற முயற்சிக்கிறார் என்று ராகுல் காந்தியை மத்திய பா.ஜ.க. அமைச்சர் கிண்டல் செய்துள்ளார்.

மத்திய அமைச்சர் பிரலஹாத் ஜோஷி திருவனந்தபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் சண்டையிடுகின்றன. கேரளாவில் சண்டை, டெல்லி மற்றும் பிற இடங்களில் நட்பு. இந்த கட்சிகளின் பாசாங்குத்தனத்தை பாருங்க. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி டெல்லியில் காங்கிரஸை ஆதரிக்கிறார். அதேசமயம், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் பல்வேறு பிராந்திய கட்சிகளின் பொறுப்பாளராக மாறியுள்ளதால், அங்கு அந்த கட்சியை (காங்கிரஸ்) மம்தா ஆதரிக்கமாட்டார்.

டிராக்டரில் நடிகராக மாற முயற்சிக்கும் ராகுல் காந்தி… பா.ஜ.க. அமைச்சர் தாக்கு..
பிரலஹாத் ஜோஷி

மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் காங்கிரஸை ஆதரிக்கிறார்கள் என்பது இடதுசாரிகளின் பாசாங்குத்தனம். அவர்கள் (காங்கிரஸ் மற்றும் இடதுசாரி) மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் நண்பர்கள். நீங்கள் (காங்கிரஸ்) கேரளாவில் பொலிட்பீரோவை நம்ப விரும்பவில்லை. ஆனால் நீங்கள் மேற்கு வங்கத்தில் அதனை (கூட்டணி) செய்கிறீர்கள். ராகுல் காந்தியிடம் நீங்கள் ஜனநாயகம் அல்லது பாசாங்குத்தனத்தை நம்புகிறீர்களா என்று கேட்க விரும்புகிறேன். அரசியல் என்பது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், இங்கே ஒரு கூட்டணிகளையும், அங்கே ஒரு கூட்டணிகளையும் கொண்டு இருப்பது மட்டுமல்ல. வெவ்வேறு மாநிலங்களில் கட்சிக்கு ஏன் வேறுபட்ட கூட்டணி உள்ளது என்பது குறித்து ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும்.

டிராக்டரில் நடிகராக மாற முயற்சிக்கும் ராகுல் காந்தி… பா.ஜ.க. அமைச்சர் தாக்கு..
இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி

டிராக்டரில் நடிகராக ராகுல் காந்தி மாற முயற்சிக்கிறார். நீங்கள் வேளாண் உற்பத்தி சந்தை குழுவுக்கு (ஏ.பி.எம்.சி.) ஆதரவாக இருந்தால், ஏன் கேரளாவில் ஏ.பி.எம்.சி. இல்லை?. ராகுல் காந்தி, பஞ்சாபில் உங்கள் அரசாங்கம், ஒப்பந்தத்தை மீறும் விவசாயியை சிறைக்கு அனுப்பும் ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும், புதுச்சேரியில் தென்னிந்தியாவில் பா.ஜ.க.வின் இரண்டாவது அரசாங்கமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். கேரளாவில் பா.ஜ.க.வின் வேகம் தொடங்கி விட்டது. மிகப்பெரிய அளவில் நாம் பெறப்போகிறோம் மற்றும் பல ஆச்சரியங்கள் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.