கோட்சேவை தேசபக்தர் என்று டிவிட் போட்ட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்…. பொங்கியெழுந்த காங்கிரஸ்..

கோட்சேவை தேசபக்தர் என்று டிவிட் போட்ட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்…. பொங்கியெழுந்த காங்கிரஸ்..

மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று ஆந்திர பிரதேச பா.ஜ.க.வின் மூத்த தலைவர் டிவிட் செய்தார். இதனையடுத்து அவர் மீது பா.ஜ.க. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சை தேசபக்தர் என்று சிலர் கூறுவதால் அடிக்கடி சர்ச்சை ஏற்படுவது உண்டு. நேற்று (நவம்பர் 15) நாதுராம் கோட்சேவின் நினைவு தினம். இந்த சூழ்நிலையில் நேற்று ஆந்திர பிரதேச பா.ஜ.க.வின் மூத்த தலைவர் நாகோத்து ரமேஷ் நாயுடு, கோட்சை தேசபக்தர் என்று தெரிவித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

கோட்சேவை தேசபக்தர் என்று டிவிட் போட்ட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்…. பொங்கியெழுந்த காங்கிரஸ்..
நாகோத்து ரமேஷ் நாயுடு

நாகோத்து ரமேஷ் நாயுடு நேற்று டிவிட்டரில், இன்று அவரது நினைவு தினம், நாதுராம் கோட்சேவுக்கு நான் மிகவும் நன்றியுடன் வணக்கம் செலுத்தகிறேன். அவர் உண்மையான மற்றும் பாரத பூமியில் பிறந்த மிகப்பெரிய தேசபக்தர் என்று என்று பதிவு செய்து இருந்தார். அந்த டிவிட்டை ஏராளமான டிவிட்டர்வாசிகள் ஷேர் செய்து இருந்தனர். அந்த டிவிட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தனது டிவிட்டரை கையாளுபவர்தான் கோட்சேவை புகழ்ந்து போஸ்ட் செய்து இருந்தார் நாயுடு விளக்கம் அளித்தார்.

கோட்சேவை தேசபக்தர் என்று டிவிட் போட்ட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்…. பொங்கியெழுந்த காங்கிரஸ்..
காங்கிரஸ்

கோட்சேவை தேசபக்தர் என்று அழைத்தற்கு நாகோத்து ரமேஷ் நாயுடுவை பதவி நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அதேசமயம் நேற்று முன்னதாக இந்து மகாசபா, கோட்சே மற்றும் கூட்டு சதிகாரர் நாராயண் ஆப்தே ஆகியோரின் 71வது நினைவு தினத்தை அனுசரித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.