மு.க ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்?: எல்.முருகன் கேள்வி

 

மு.க ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்?: எல்.முருகன் கேள்வி

திமுக தலைவர் ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே கடந்த 13 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட்-ஐ எதிர்கொள்ள அச்சமடைந்த மோதிலால், ஜோதிஸ்ரீ துர்கா உள்ளிட்ட 3 மாணவர்கள் 12 ஆம் தேதி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுவரை தமிழகத்தில் 13 மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்திருப்பதால், நீட் தேர்வுக்கு எதிரான குரல் வலுத்தது. இருப்பினும், மாணவர்கள் அந்த தேர்வை எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டதால், தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வை எழுதினர்.

மு.க ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்?: எல்.முருகன் கேள்வி

இந்த நீட் விவகாரம் நேற்று சட்டப்பேரவையில் எதிரொலித்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவருக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் அனல் பறக்கும் விவாதம் எழுந்தது. இதனையடுத்து, நீட் தேர்வை எப்படிரத்து செய்வீர்கள் என அதிமுக அமைச்சர் எழுப்பிய கேள்விக்கு, ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கியது போல என முக ஸ்டாலின் பதில் அளித்தார்.

இந்த நிலையில், மு.க ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தபோது நீட் தேர்வை எதிர்த்து திமுக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் விமர்சித்துள்ளார். மேலும், மருத்துவ படிப்புகளில் அரசு மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பாஜக வரவேற்பு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.