தமிழகத்தில் இருந்து கறுப்பர் கூட்டத்தையும் திமுகவையும் விரட்ட காவிக்கூட்டம் தயாராக உள்ளது: முருகன்

 

தமிழகத்தில் இருந்து கறுப்பர் கூட்டத்தையும் திமுகவையும் விரட்ட காவிக்கூட்டம் தயாராக உள்ளது: முருகன்

ஈரோட்டில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் முருகன், “பாஜகவில் தங்கள் கட்சியினரை இணைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மற்ற கட்சிகள் உளவு பார்க்கின்றனர். 2021 ஆம் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தை அலங்கரிப்பது நிச்சயம். தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சி எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் இருந்து கறுப்பர் கூட்டத்தையும் திமுகவையும் விரட்ட காவிக்கூட்டம் தயாராக உள்ளது: முருகன்

தமிழகத்தில் இருந்து கறுப்பர் கூட்டத்தையும் திமுக வையும் விரட்ட காவிக்கூட்டம் தயாராக உள்ளது. நீட் தேர்வு என்பது உச்சநீதிமன்றம் வரை சென்று தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் நடக்கிறது. தமிழகத்தில் புதிதாக 15 மருத்துவ கல்லூரிகள் வர உள்ள சூழலில் , தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நீட் தேர்வு தொடர்பாக மாநில அரசு கொண்டு வந்திருக்கும் 10% உள் இடஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம். துரித நடவடிக்கை எடுத்து அதனை அமல்படுத்த வேண்டும். அனைத்து தனியார் பள்ளிகளையும் போல அரசு பள்ளி மாணவர்களும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. 2016 ல் 75 இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயத்தது பா.ஜ.க.அதன் அடைப்படையில் தான் தற்போது 60 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளோம்” எனக் கூறினார்.