’இந்தி கட்டாயப்படுத்தப்பட வில்லை’ புதிய கல்வி கொள்கை பற்றி பிஜேபி தலைவர் எல்.முருகன்

2019 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வரைவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வழங்கியது..அதில் உள்ள பல அம்சங்கள் தமிழகத்தில் பல எதிர்ப்புகளை உருவாக்கியது. குறிப்பாக, கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டன.

இந்த நிலையில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் புதிய கல்விக் கொள்கை குறித்த தம் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் ’ஒவ்வொரு மாணவரின் தனித்தன்மையை, திறமையை வெளிக்கொணரும் வகையில் புதிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டுள்ளது.

மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை அனைத்து மட்டத்திலும், பள்ளிக் கல்விக்கு உலக அளவிலான அணுகுமுறையை புதியக் கல்விக் கொள்கை உறுதி செய்கிறது.

உலக அளவில் நம் மாணவர்கள் போட்டி போடுவதற்கு, இப்புதிய கல்விக் கொள்கை அடிப்படையாக அமைவது உறுதி. அறிவு, கற்றல், ஆற்றல் அனைவருக்கும் சொந்தம் என்பதை இக்கொள்கை வலியுறுத்துகிறது.

நாடு முழுவதும் சமமான கல்வி கற்பிக்கலாம். குறைந்தபட்சம் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் தாய்மொழிக் கல்வி மூலம் பயில்வதன் காரணமாக, பள்ளிக்கு வரும் குழந்தைகள் உற்சாகப்படுத்தும், கற்பதை உணர்ந்தும் கல்வி கற்றிட வழி வகுக்கும். பள்ளிக்கு செல்லாத ஏறத்தாழ 2 கோடி குழந்தைகள் பள்ளிக் கூடங்களை நோக்கி வருவதற்கு வாய்ப்பை உருவாக்கும்.

6ஆம் வகுப்பு முதலே தொழில் கல்வி பயிற்றுவிக்க இருப்பது மாணவர்கள் வளர, வளர அவர்கள் தன்னம்பிக்கையையும், சிறப்பு தேர்ச்சியினையும் உயர்த்தும் என்பது உறுதி. இளைஞர்கள் வேலை தேடாமல், வேலை கொடுக்கும் ஆற்றல் மிக்கவர்களாக உருவாவார்கள்.

புதிய கல்விக் கொள்கை 2020 , எந்த குழந்தையும் சமூக சூழ்நிலை காரணமாகவோ அல்லது பின்புலம் காரணமாகவோ, கல்வி கற்பதில் சிறந்து விளங்கும் எந்த வாய்ப்பையும் இழந்து விடக் கூடாது என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்துப் பிரிவு குழந்தைகளுக்கும் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.ஆசிரியர்கள் பணி நியமனம், செயல்திறன் மதிப்பீடு, வலுவான, வெளிப்படையான நடைமுறைகளின் அடிப்படையில் நடைபெறும். ஆசிரியர்களுக்கான தேசிய தொழில் முறைத் தரம் என்ற பொது அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

உலகத் தரத்திற்கு இனையாக சிறந்த பன்னோக்கு கல்வி வழங்கும் மாதிரி அமைப்பாக , ஐ.ஐ.டிக்களுக்கு இணையான கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைகழகங்கள் அமைக்கப்படுவது மிகச் சிறந்த ஒன்றாகும். கல்வித்துறைக்கு புதிய அமைப்புகள், புதிய திட்டங்கள், கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் மாணவர்களுக்கான திட்டங்கள் என உலகத்தரத்திற்கு நிகரான கல்வி நிலையை நம் நாட்டிலும் உருவாக்க, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை, ஏறத்தாழ இன்றைய நிலையில் 16 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்திட திட்டமிடப்படும். இதன் காரணமாக,  புதிய கல்விக் கொள்கையின் நோக்கங்கள் முழுமை அடையும் என்பது உறுதி.

Stop Hindi Imposition

மும்மொழித்திட்டம் என்பது தமிழ்நாட்டைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் இப்போதும் செயல்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது. சம்ஸ்கிருதம், இந்தி என்பது எந்த மாநிலத்திலும் கட்டாயப்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே இது போன்ற பொய்ப் பிரச்சாரங்களை செய்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. மாணவர்களின் எதிர் காலத்துக்கானது. அவர்கள் வாழ்வில் ஒளி வீசச் செய்திடப்போவது. இதையும் சுய நோக்கத்தோடு, காழ்ப்புணர்ச்சியோடு விமர்சிப்பதை கண்டிக்கிறேன். புதிய கல்விக் கொள்கை பற்றி விமர்சிக்க முன் வருபவர்கள் அதை முழுமையாக படித்து உணர வேண்டும் ‘ என்று தெரிவித்துள்ளார்.

Most Popular

 இந்த உலகம் வலதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அல்ல – #LefthandersDay

’எதைக் கொடுத்தாலும் வலதுக்கையால்தான் கொடுக்கணும்’ என்று சின்னக் குழந்தையிலிருந்து சொல்லிக்கொடுத்திருப்பார்கள். இந்தப் பழக்கம் என்பது மிக ஆழமாக எல்லோரின் மனதிலும் பதிந்துவிட்டது. அதனால் பெரிய சோகம் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஒரு...

“கணக்கு போடாம, கண்ட படத்தை போடறீங்களே சார் ” பாடம் நடத்தாமல் பலான படம் காமித்த ஆசிரியர் -படம் பார்த்த மாணவன் ஆசிரியர் மீது புகார்.

ஒரு ஆசிரியர் தன்னிடம் ட்யூஷன் படிக்க வந்த மாணவனுக்கு ,பாடம் நடத்தாமல் தினமும் பலான படத்தை காமித்துக்கொண்டிருந்ததால் கடுப்பான மாணவன் அவர் மீது போலிஸில் புகார் கொடுத்தான். உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே பாரா...

தேசிய கோடி அவமதிப்பு: எஸ்.வி சேகர் மீது வழக்குப்பதிவு!

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியும், தேசியக் கோடியை அவமதிக்கும் விதமாகவும் எஸ்.வி.சேகர் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ மிகவும் சர்ச்சைக்குள்ளானது. அதற்கு எஸ்.வி சேகர் நன்றி மறந்தவர், அதிமுக தான்...

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 74 ஆயிரம் கோடி லாபம்

இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் ஏற்றம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சில மணி நேரத்தில் பிறகு பங்கு வர்த்தகம் சரிவு காண தொடங்கியது. கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், கெயில்...
Do NOT follow this link or you will be banned from the site!