விநாயகர் சதுர்த்தி கொண்டாட முதல்வரிடம் அனுமதி கேட்ட பாஜக தலைவர் முருகன்! அதற்கு முதல்வர் அளித்த பதில்…

 

விநாயகர் சதுர்த்தி கொண்டாட முதல்வரிடம் அனுமதி கேட்ட பாஜக தலைவர் முருகன்! அதற்கு முதல்வர் அளித்த பதில்…

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது . அந்த வகையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் நீடித்து வருவதால் அதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை நிறுவும், அதை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பாஜக மற்றும் இந்து முன்னணி போன்ற கட்சிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட முதல்வரிடம் அனுமதி கேட்ட பாஜக தலைவர் முருகன்! அதற்கு முதல்வர் அளித்த பதில்…

இதனிடையே சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்தார். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்குமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

முதலமைச்சரிடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் எல்.முருகன், “தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முதல்வரிடம் அனுமதி கோரியுள்ளோம். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதாக உத்தரவாதம் அளித்தோம். அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியிலான சந்திப்பு நடைபெறவில்லை. அதற்கு இன்னும் காலம் உள்ளது” எனக் கூறினார்.