3 முறை தொடர் தோல்வி; பெண் வேட்பாளர்களிடம் முருகனின் ஜம்பம் பலிக்குமா?

 

3 முறை தொடர் தோல்வி; பெண் வேட்பாளர்களிடம் முருகனின் ஜம்பம் பலிக்குமா?

பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுவதால் அந்த தொகுதி விஐபி தொகுதியாக மாறியுள்ளது. அந்த வகையில் தாராபுரம் தொகுதியை குறித்து அலசல் இதோ!

விஐபி தொகுதியான தாராபுரம்

3 முறை தொடர் தோல்வி; பெண் வேட்பாளர்களிடம் முருகனின் ஜம்பம் பலிக்குமா?

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் தாராபுரமும் ஒன்று. தனித்தொகுதியான தாராபுரத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல்களின் நிலவரத்தை காண்போம். 2016 – அதிமுக வேட்பாளர் பொன்னுசாமி – இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் காளிமுத்துவை காட்டிலும் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றிகண்டார். கிட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த சுமார் 12 சட்டமன்ற தேர்தல்களில் தாராபுரம் தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் முறையும் வெற்றிக்கனியை ருசித்துள்ளது.

பாஜக எல்.முருகன்

3 முறை தொடர் தோல்வி; பெண் வேட்பாளர்களிடம் முருகனின் ஜம்பம் பலிக்குமா?

அதிமுக கூட்டணியில் உள்ள 20 சீட்டுகளை லாவகமாக பெற்றுள்ள பாஜகவுக்கு தான் தாராபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் வேட்பாளரான எல்.முருகன் களமிறக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தியை சொந்த ஊராக கொண்ட இவர் வழக்கறிஞர் ஆவார். இதையடுத்து 1997இல் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் மாணவர் பிரிவில் பணியாற்றிய இவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் 2006-ஆம் ஆண்டில் சங்ககிரி தொகுதியிலும், 2011-ல் ராசிபுரம் தொகுதியிலும், அதே ஆண்டு நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு மூன்று முறை தொடர் தோல்விகளை கண்டார். பின்னர் கடந்த மார்ச் மாதம் தமிழக பாஜக தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். பாஜக தலித் மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை சுட்டிக்காட்ட தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். இதை அவரே பெருமையாக கூறிய காலமும் உண்டு. அந்த வகையில் இந்த முறை பலம் பொருந்திய கட்சியான அதிமுக கூட்டணியில் களமிறங்குகிறார் எல். முருகன்

களமாடும் 3 பெண் வேட்பாளர்கள்

3 முறை தொடர் தோல்வி; பெண் வேட்பாளர்களிடம் முருகனின் ஜம்பம் பலிக்குமா?

திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தாராபுரத்தில் இந்த முறை திமுகவே நேரடியாக களம் காண்கிறது. இங்கு திமுக சார்பாக கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார். கடந்த 3 தேர்தல்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வந்த கயல்விழியின் ஆசை இந்த முறையே நிறைவேறியுள்ளது. அதேபோல் அமமுக வேட்பாளர் கலாராணி என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் 25 வயது இளம் வேட்பாளரான ரஞ்சிதாவும் போட்டியிடுகிறார்கள். கிட்டத்தட்ட திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி என மூன்று கட்சிகளிலும் பெண் வேட்பாளர்களே தாராபுரத்தில் களமாடுகிறார்கள். மக்கள் நீதி மய்யம் சார்பாக சார்லி என்பவர் போட்டியிடுகிறார். இவர்களுக்கு எதிராக வெற்றி பெற்று எல்.முருகன் முதல் முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைவாரா? அல்லது 4வது முறையாக தோல்வியை தழுவுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.