யோகி மாநிலத்தில் கார் எந்த நேரத்திலும் கவிழும்…. ஹத்ராஸ் சம்பவம் குறித்து சூசகமாக சொன்ன பா.ஜ.க. மூத்த தலைவர்

யோகி மாநிலத்தில் கார் எந்த நேரத்திலும் கவிழும்…. ஹத்ராஸ் சம்பவம் குறித்து சூசகமாக சொன்ன பா.ஜ.க. மூத்த தலைவர்

ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வரும் வேளையில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை, யோகி மாநிலத்தில் கார் எந்த நேரத்திலும் கவிழும் என்று கைலாஷ் விஜயவர்ஜியா கூறியது பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்தால் சிதைக்கப்பட்டார். டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தை மட்டுமல்ல நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

யோகி மாநிலத்தில் கார் எந்த நேரத்திலும் கவிழும்…. ஹத்ராஸ் சம்பவம் குறித்து சூசகமாக சொன்ன பா.ஜ.க. மூத்த தலைவர்
கைலாஷ் விஜயவர்ஜியா

ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜயவர்ஜியா கூறுகையில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும். குற்றவாளிகள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள். யோகி ஆதித்யநாத் முதல்வர். அவரது மாநிலத்தில் ஒரு கார் எப்போது வேண்டுமானாலும் கவிழ்க்க முடியும் என்பதை நான் அறிவேன் என தெரிவித்தார்.

யோகி மாநிலத்தில் கார் எந்த நேரத்திலும் கவிழும்…. ஹத்ராஸ் சம்பவம் குறித்து சூசகமாக சொன்ன பா.ஜ.க. மூத்த தலைவர்
போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி விகாஷ் துபே

கடந்த ஜூலை மாதத்தில் எட்டு போலீசாரை கொன்ற ரவுடி விகாஸ் துபேவை கைது செய்த பிறகு உத்தர பிரதேச போலீசார் சுட்டு கொன்றனர். ரவுடி விகாஸ் துபேவை போலீசார் கைது செய்து காரில் அழைத்து வந்து கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்தது. அப்போது ரவுடி விகாஸ் துபே தப்பிக்க முயற்சி செய்தபோது போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டான். இந்த சம்பவத்தைதான் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் கைலாஷ் விஜயவர்ஜியா மறைமுகமாக குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. அந்த சம்பவத்தை போன்று ஹத்ராஸ் குற்றவாளிகளும் சுட்டு கொல்லப்படலாம் என்ற பரவலாக பேசப்படுகிறது.