முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முன்வைக்காமல் மேற்கு வங்க தேர்தலில் போட்டி…. பா.ஜ.க. தலைவர் தகவல்..

முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முன்வைக்காமல் மேற்கு வங்க தேர்தலில் போட்டி…. பா.ஜ.க. தலைவர் தகவல்..

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக விளங்கிய மேற்கு வங்கத்தில் அந்த கட்சியை வீழ்த்தி இரண்டாவது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளார். அப்படிப்பட்ட மம்தாவுக்கு தற்போது பா.ஜ.க. கடும் போட்டியாக உருவெடுத்து உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 18 இடங்களை வென்று மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முன்வைக்காமல் மேற்கு வங்க தேர்தலில் போட்டி…. பா.ஜ.க. தலைவர் தகவல்..
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

இந்த சூழ்நிலையில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆனால் இப்போதே திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளரை முன்வைக்காமலேயே களம் காண உள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்ஜியா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முன்வைக்காமல் மேற்கு வங்க தேர்தலில் போட்டி…. பா.ஜ.க. தலைவர் தகவல்..
கைலாஷ் விஜய்வர்ஜியா

இப்போதைக்கு, நாங்கள் யாரையும் எங்கள் முதலமைச்சர் முகமாக முன்வைக்க மாட்டோம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் போட்டியிடுகிறோம், தேர்தலில் வெற்றி பெறுவோம். மக்கள் ஆட்சிக்கு வாக்களித்தவுடன், மத்திய தலைமையையுடன் சட்டப்பேரவை கட்சி அதன் முதலமைச்சர் தேர்வு குறித்து முடிவு செய்யும். இப்போது 294 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் 220-230 இடங்களை வெல்வதே எங்கள் இலக்கு. மக்களவை தேர்தலில் செய்தது போலவை எங்கள் இலக்கை அடைவோம். முதல்வர் முகத்தை முன்வைக்கும் பிரச்சினை ஒரு காரணியாக இருக்காது என தெரிவித்தார்.