ஹத்ராஸ் சம்பவம்: கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள்! அந்த பெண் தான் பையனை வயலுக்கு அழைத்து சென்றார்- பாஜக தலைவர்

 

ஹத்ராஸ் சம்பவம்: கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள்! அந்த பெண் தான் பையனை வயலுக்கு அழைத்து சென்றார்- பாஜக தலைவர்

ஹத்ராஸில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நான்கு பேரும் அப்பாவிகள் என அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்

உத்திர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாநிலத்தில் 19 வயதான தலித் பெண் 4 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்தார். அந்த பெண்ணின் முதுகெலும்பு சிதைக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என வெளியான செய்தி பதைபதைக்கச் செய்தது.

ஹத்ராஸ் சம்பவம்: கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள்! அந்த பெண் தான் பையனை வயலுக்கு அழைத்து சென்றார்- பாஜக தலைவர்

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவத்சவா, “சம்பவம் நடந்த நாளன்று அந்த பெண்தான் கைது செய்யப்பட்ட பையனை வயலுக்கு அழைத்திருக்க வேண்டும். ஏன் என்றால் அவர்கள் இருவருக்குமே முன்பே உறவு இருந்திருக்க வேண்டும். இதனால்தான் அந்தப்பெண் அந்த பையனை அழைத்திருக்க வேண்டும். பொதுவாக இப்படி வன்கொடுமைக்கு ஆளாகி பிணமாக கண்டெக்கப்படும் பெண்கள், பொதுவாக கரும்பு, சோளம் மற்றும் தினை வயல்கள் அல்லது புதர்கள், காடுகளில்தான் கண்டெடுக்கப்படுவார்கள். அவர்கள் ஒரு போதும் அரிசி அல்லது கோதுமை வயல்களில் பிணமாகக் கண்டெடுக்கப்படுவதில்லை?

ஏன் என்றால் அரிசி மற்றும் கோதுமை பயிர்கள் மூன்று அல்லது நான்கு அடிகள்தான் வளரும். கரும்பு மற்றும் சோள வயல்களில் தான் ஒரு ஆள் மறைந்து கொள்ளும் அளவிற்கு இடம் உள்ளது. ஹத்ராஸ் சம்பவத்தில் தொடர்புடைய அந்த பெண் இழுத்து செல்லப்பட்டதற்கோ, வன்கொடுமை செய்யப்பட்டதற்கோ சாட்சிகள் இல்லை. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அப்பாவிகள் என உறுதியாக கூறுவேன், அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்றால், மனரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாவார்கள்” என தெரிவித்துள்ளார்.