பேச்சு சுதந்திரத்தை வெளிப்படுத்த பாகிஸ்தானை பாராட்டும் தலைவர்களை தண்டிக்க வேண்டும்.. பா.ஜ.க.

பேச்சு சுதந்திரத்தை வெளிப்படுத்த பாகிஸ்தானை பாராட்டும் தலைவர்களை தண்டிக்க வேண்டும்.. பா.ஜ.க.

தங்களது பேச்சு சுதந்திரத்தை வெளிப்படுத்த பாகிஸ்தானை பாராட்டும் தலைவர்களை சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அர்ஜூன் சிங் தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்களது போராட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கண்டு கொள்ளததால், தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு சென்று பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடாதீங்க விவசாயி சங்கங்கள் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். அந்தவகையில், கொல்கத்தாவில் விவசாயி சங்கங்கள் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் கூட்டம் ஒன்றில் பேசுகையில், இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பாகிஸ்தான் அல்ல பிரதமர் மோடியே என்று பேசியிருந்தார்.

பேச்சு சுதந்திரத்தை வெளிப்படுத்த பாகிஸ்தானை பாராட்டும் தலைவர்களை தண்டிக்க வேண்டும்.. பா.ஜ.க.
அர்ஜூன் சிங்

விவசாயி சங்க தலைவர் பாகிஸ்தானை பாராட்டி பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அர்ஜூன் சிங் கூறுகையில், தங்களது பேச்சு சுதந்திரத்தை வெளிப்படுத்த, பாகிஸ்தான் மற்றும் இதர நாடுகளை பாராட்டவும் மற்றும் மலிவான அரசியலில் ஈடுபடுவதை தேர்வு செய்யும் தலைவர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

பேச்சு சுதந்திரத்தை வெளிப்படுத்த பாகிஸ்தானை பாராட்டும் தலைவர்களை தண்டிக்க வேண்டும்.. பா.ஜ.க.
மஜீத் மேமன்

அதேசமயம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் மஜீத் மேமன் கூறுகையில், வேளாண் சட்டங்கள் தொடர்பான தங்களை கவலைகளுக்கு பிரதமர் மோடி செவிசாய்க்கவிலலை என்பதற்காக தங்களது உணர்வுகளை வெளிபடுத்த விவசாயிகள் விரும்புகின்றனர். விவசாயிகளின் துயரங்களுக்கு கவனம் செலுத்தாததால் தற்போதைய பிரதமர் மோடியை காட்டிலும் மோசமான ஆட்சியாளர் யாரும் இல்லை என்ற தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த அவர்கள் விரும்புகின்றனர். என்று தெரிவித்தார்.