“கை வைக்காதீர்கள் ஸ்டாலின்… ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” – அண்ணாமலை எச்சரிக்கை!

 

“கை வைக்காதீர்கள் ஸ்டாலின்… ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” – அண்ணாமலை எச்சரிக்கை!

தருமபுரியில் பாஜக மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “தனியார் மயத்தைப் பலரும் எதிர்க்கின்றனர். 70 ஆண்டு கால வரலாற்றில் மத்திய அரசின் பல அலுவலகங்கள் பயன்பாடின்றிக் கிடக்கின்றன. இத குத்தகை அடிப்படையில் தனியாரிடம் வழங்கி செயல்படச் செய்யவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம், அடுத்த 4 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும். இது ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டுக்கு, தரமான சாலை என திட்டங்களை நிறைவேற்றவே பயன்படுத்தப்படும்.

“கை வைக்காதீர்கள் ஸ்டாலின்… ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” – அண்ணாமலை எச்சரிக்கை!

ஆனால் இதை அறிந்தும் அறியாதது போல எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன. விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாகவே புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்தச் சட்டங்களை எதிர்க்கின்ற தலைவர்கள் யாரும் விவசாயத்தில் நேரடியாக ஈடுபடுவதில்லை. இடைத்தரகர்களை ஒழித்துக்கட்டி விவசாயிகள் பயன்பெறும் நோக்கில் அமைந்துள்ளன புதிய வேளாண் சட்டங்கள். மோடி அரசின் முதல் மரியாதை விவசாயிகளுக்குத் தான் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

“கை வைக்காதீர்கள் ஸ்டாலின்… ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” – அண்ணாமலை எச்சரிக்கை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். இது தமிழ்நாட்டு விவசாயிகளின் வயிற்றில் கை வைக்கும் வேலை. இதனை அவர் கைவிட வேண்டும். இதை ஒருபோதும் பாஜக அனுமதிக்காது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடும் அறிவிப்புகள் இந்து சம்பிரதாயங்களை அழிக்கும் வகையில் அமைந்துள்ளது. நமது வாழ்க்கை முறையில் திமுக அரசு கை வைக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது. விழா நாளில் வீட்டின் முன்பு அனைவரும் விநாயகர் சிலை வைத்துக் கொண்டாடுவோம்’’ என்றார்.