“அத உங்க ஓனர்ட்ட கேளுங்க” – அண்ணாமலையை கலாய்த்த திமுக எம்பி!

 

“அத உங்க ஓனர்ட்ட கேளுங்க” – அண்ணாமலையை கலாய்த்த திமுக எம்பி!

கன்னித்தீவு நெடுந்தொடரே முடிந்துவிட்டாலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கட்டி முடிக்காது போல என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அந்தளவிற்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அது மாறியிருக்கிறது. நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மதுரை எய்ம்ஸ் மிக முக்கிய தேர்தல் பிரச்சார ஆயுதமாக இருந்தது. AIIMS என்று எழுதிய செங்கலை அனைத்து ஊர்களுக்கும் எடுத்துச் சென்று காமெடியாக பிரச்சாரம் செய்தார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

“அத உங்க ஓனர்ட்ட கேளுங்க” – அண்ணாமலையை கலாய்த்த திமுக எம்பி!

இது அரசியல் ஸ்டண்ட்கள் அதற்குள் போக வேண்டாம். சீரியஸாக எடுத்துக்கொண்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் நீதிமன்றம் இன்னும் 3 ஆண்டுகளுக்குள் அதாவது 2024ஆம் ஆண்டுக்குள் கட்டுமானப் பணிகளை முடித்துவிட வேண்டும் என மத்திய அரசுக்கு ஆணையிட்டது. மத்திய அரசு இந்தாண்டே வகுப்புகளை தற்காலிகமாக வேறு எங்காவது தொடங்கலாம் என்றது. இதற்குப் பின் இவ்விவகாரம் ஆறிப்போனது. தற்போது மீண்டும் திரியைக் கொளுத்திவிட்டிருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

“அத உங்க ஓனர்ட்ட கேளுங்க” – அண்ணாமலையை கலாய்த்த திமுக எம்பி!

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அண்ணாமலை, “இந்தாண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மாணவர்கள் சேர்க்கப்படாதது வேதனையாக உள்ளது. வகுப்புகளை விரைவாக தொடங்க மத்திய அரசு கொடுத்த மூன்று வாய்ப்புகளை மாநில அரசு நிராகரித்துவிட்டது. பல்வேறு மத்திய கல்வி நிறுவனங்கள் ஆரம்ப கட்டத்தில் தற்காலிக வகுப்பறைகளில் தொடங்கியுள்ளன. கட்டுமானம் தொடங்கும் போது, 150 நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழை மாணவர்களை உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் படிக்க மாநில அரசு மறுப்பதற்கு என்ன காரணம்?

ஐஐஎம் திருச்சி கூட புதியதாக இருந்தபோது என்ஐடி திருச்சியில் இருந்து செயல்பட்டது. மத்திய அரசுக்கு எதிரான மனநிலை தமிழ்நாட்டில் தீவிர நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக திமுக எம்பி செந்தில்குமார் செய்துள்ள ட்வீட்டில், ” ஒரு #செங்கல் அடியில் 150 மாணவி/ மாணவர்களை மருத்துவ படிப்பில் அனுமதிப்பது மிக மிக கடினம். மதுரைக்கு பின்பு அறிவிக்கப்பட்ட ஜம்மு/ஆந்திரா AIIMS மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் பதில் சொல்லமாட்டார்கள். அவங்க ownerயிடம் கேட்க வேண்டிய கேள்வி இங்க வந்து கேட்டுட்டு” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் பதிவுகள் வைராலாகி வருகிறது.