“நீட் தேர்வு ஏழைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்” – அண்ணாமலையின் அரிய கருத்து

 

“நீட் தேர்வு ஏழைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்” – அண்ணாமலையின் அரிய கருத்து

நீட் தேர்வுக்கு திமுக ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆட்சிக்கு வந்த பின் நிச்சயம் நீட்டை ஒழிப்போம் என தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தது. தற்போது அதற்கான முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்த பின்னும் நீட் தேர்வில் தங்கள் நிலைப்பாடு மாறப்போவதில்லை என திட்டவட்டமாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அதன் முதல்படியாக நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராயவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழுவை நியமித்தார்.

“நீட் தேர்வு ஏழைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்” – அண்ணாமலையின் அரிய கருத்து

அந்த குழு, நீட் தேர்வின் பாதிப்பு பற்றி ஆராய்வதோடு மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மாணவர் சேர்க்கை முறையை அரசுக்கு பரிந்துரைக்கும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி குழு பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்டு 165 பக்க அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்துள்ளார். நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா விரைவில் கொண்டுவரப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

NEET'க்கு சட்டரீதியாக முற்றுப்புள்ளி வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் :  ஒன்றிய அரசுக்கு 'முரசொலி' பதிலடி!

இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகின்றன. அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், “நீட் தேர்வை புறந்தள்ள தமிழ்நாடு மாநில சட்டம் 3/2007-னைப் போன்றதொரு புதிய சட்டத்தினை இயற்றி, குடியரசு தலைவர் ஒப்புதலை பெற முயற்சிக்கலாம் என ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி நீட்டை புறந்தள்ளுவதற்கு புதிய சட்டம் நிறைவேற்றப்படும். பின்னர் அது குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்படும். மருத்துவ சேர்க்கையில் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வையும் தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“நீட் தேர்வு ஏழைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்” – அண்ணாமலையின் அரிய கருத்து

இதை எதிர்த்துப் பேசியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நீட் தேர்வு ஏழைகளின் வரப்பிரசாதம். தமிழ் வழியில் பயின்றோர்கள் நீட்டில் சாதித்துள்ளனர். புதிய கல்விக்கொள்கை வேண்டுமென 51 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார். சமீபத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசையும் இதே அரிய கருத்தை முன்மொழிந்திருந்தார். தற்போது அவரது கருத்தை அண்ணாமலையும் வழிமொழிந்திருக்கிறார்.