“இது அதுல்ல” – திமுக மீது விமர்சனம் வைக்க ராமதாஸ் அறிக்கையை காப்பி அடித்தாரா அண்ணாமலை?

“இது அதுல்ல” – திமுக மீது விமர்சனம் வைக்க ராமதாஸ் அறிக்கையை காப்பி அடித்தாரா அண்ணாமலை?

நெல்லை மாவட்டத்திலுள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “புதிதாக பொறுப்பேற்ற ஒரு அரசின் செயல்பாடுகளை விமர்சிக்க ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும். திமுகவின் இந்த 100 நாள் ஆட்சி என்பது கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு, பெருவாரியான காரம் போன்றதாக அமைந்துள்ளது.

“இது அதுல்ல” – திமுக மீது விமர்சனம் வைக்க ராமதாஸ் அறிக்கையை காப்பி அடித்தாரா அண்ணாமலை?

இனிப்பு என்னவென்றால், மத்திய அரசுடன் இணைந்து இரண்டாம் அலை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளது. கசப்பு என்னவென்றால் மத்திய அரசிடமிருந்து ஆரம்பித்து பல்வேறு விஷயங்களை தேவையில்லாமல் பேசி வருகின்றனர். தமிழகத்தில் அநேக இடங்களில் பாஜக தொண்டர்களையும் கைது செய்துள்ளனர். முன்னாள் முதலமமைச்சர் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை என்பது முடித்து வைக்கப்பட்டஒன்று. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அந்த வழக்கை மீண்டும் கையிலெடுப்பது போல தோன்றுகிறது.

“இது அதுல்ல” – திமுக மீது விமர்சனம் வைக்க ராமதாஸ் அறிக்கையை காப்பி அடித்தாரா அண்ணாமலை?

இதையெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் கைவிட்டு கொரோனா மூன்றாம் அலை வராமல் தடுக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்’’ என்றார். இதற்கு முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ், பட்ஜெட் குறித்து வெளியிட்ட அறிக்கையில் இதேபோன்று ருசியின் அடிப்படையில் விமர்சனம் செய்தார். இனிப்பு, காரம், கசப்பு என பல்வேறு சுவைகளில் பட்ஜெட் இருப்பதாகக் கூறியிருந்தார்.