தேர்தலில் பாஜக தணித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும்: எல்.முருகன் பேட்டி!

 

தேர்தலில் பாஜக தணித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும்: எல்.முருகன் பேட்டி!

அதிமுக-பாஜக உறவில் எந்த பிரச்னையும் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. வழக்கம் போலவே தற்போது அனைத்து கட்சிகளிடையேயும் கூட்டணி பிரச்னை எழுந்துள்ளது. குறிப்பாக அதிமுகவுடன் பாஜக மற்றும் தேமுதிக கூட்டணி வைத்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதனால் இந்த தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தலில் பாஜக தணித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும்: எல்.முருகன் பேட்டி!

அதே போல விநாயகர் சதுர்த்தி விவகாரம், இ பாஸ் நடைமுறை உள்ளிட்ட பல கருத்து வேறுபாடுகளால் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே பிரச்னை மூண்டுள்ளதாக தெரிகிறது. இதுமட்டுமில்லாமல் இன்று காலை பேசிய பாஜக தேசிய செயலர் ஹெச் ராஜா, அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ஜெயக்குமார் பேசுவது சரியில்ல, மீறினால் பாஜக-அதிமுக கூட்டணியில் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்திருந்தார். இதனால் அதிமுகவின் கூட்டணியில் பெரும் குழப்பம் நீடிக்கிறதாக கூறப்படுகிறது.

தேர்தலில் பாஜக தணித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும்: எல்.முருகன் பேட்டி!

இந்த நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக- பாஜக உறவு சிறப்பாக இருப்பதாகவும் பாஜக தனியாக தேர்தலில் போட்டியிட்டால் 60 இடங்களில் வெற்றி பெரும் என்றும் தெரிவித்தார். மேலும், பாஜகவில் யார் வேண்டுமானாலும் இணையலாம், பிறகு எப்படி செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம் என்றும் மும்மொழி கொள்கையை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்தார்.