திமுகவின் முதல்வர் வேட்பாளர் உதயநிதியா..? கனிமொழியா..? – எல்.முருகன்

 

திமுகவின் முதல்வர் வேட்பாளர் உதயநிதியா..? கனிமொழியா..? – எல்.முருகன்

தமிழகம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுகவின் முதல்வர் வேட்பாளர் உதயநிதியா..? கனிமொழியா..? – எல்.முருகன்

சென்னை அண்ணாநகரில் 234 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக பொறுப்பாளர்களுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது . தமிழகம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும். கூட்டணிக் கட்சியின் ஆட்சி என்ற முறையில் அதிமுக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் கூடுதல் மொழிகள் கற்பிக்கப்படுகிறது.

திமுகவின் முதல்வர் வேட்பாளர் உதயநிதியா..? கனிமொழியா..? – எல்.முருகன்

முரசொலி மூலப் பத்திரம் எங்கே என்று எல்லோரும் கேட்கிறோம். நான் எஸ்சி., எஸ்டி ஆணையத்தின் தலைவராக இருந்தபோது கேட்டேன். ஆனால் என் மீது வழக்கு தொடரப்பட்டு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.

திமுகவின் முதல்வர் வேட்பாளர் உதயநிதியா..? கனிமொழியா..? – எல்.முருகன்

ஸ்டாலின் முரசொலி அலுவலகத்தில் மூல பத்திரத்தை வெளியிடவில்லை என்றால் தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். திமுகவின் முதல்வர் வேட்பாளர் உதயநிதியா..? கனிமொழியா..? என அக்கட்சியினரே குழம்பி உள்ளனர் ” என்றார் .