அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு : பயந்து பின்வாங்கிய எல்.முருகன்

அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு : பயந்து பின்வாங்கிய எல்.முருகன்

பாஜகவிற்கு தனிக் கொள்கை இருந்தாலும் அதிமுக கூட்டணி தான் இருக்கிறது என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு : பயந்து பின்வாங்கிய எல்.முருகன்

சமீபத்தில் அரியலூரில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய எல்.முருகன், முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை பாஜக தலைமை தான் முடிவு செய்யும் என்றும் அதிமுக தலைவரே முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் கூட, அதை பாஜக தலைமை தான் அறிவிக்கும் என்று தெரிவித்தார்.

அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு : பயந்து பின்வாங்கிய எல்.முருகன்

இதற்கு பதிலடி கொடுத்த அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, “கூட்டணிக்கு முருகன் குழப்பத்தை ஏற்படுத்துவரானால் பாஜக தலைமை முருகனை நீக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக துணை தலைவர் அண்ணாமலை , தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ. 2000 ஆக தருவதுதான் தமிழக அரசியல். 2ஆயிரத்தை நம்பி 5 ஆண்டுகளை தமிழக மக்கள் அடகு வைத்து விடக்கூடாது. பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனில் காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள் தான் அரசியல்வாதியாக வருவர் ” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு : பயந்து பின்வாங்கிய எல்.முருகன்

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அளித்துள்ள பேட்டியில், “பாஜகவிற்கு தனிக் கொள்கை இருந்தாலும் அதிமுக கூட்டணி தான் இருக்கிறது. திமுகவுக்கும் காங்கிரசுக்கும் தனித் தனிக் கொள்கை இருப்பது போல அதிமுக பாஜக இடையே தனித் தனிக் கொள்கை உள்ளது” என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.