‘7.5% இட ஒதுக்கீடு’ நந்தகுமாரின் கடிதத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை: எல்.முருகன் விளக்கம்!

‘7.5% இட ஒதுக்கீடு’ நந்தகுமாரின் கடிதத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை: எல்.முருகன் விளக்கம்!

இட ஒதுக்கீடு விவகாரத்தில் நந்தகுமாரின் கடிதத்துக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

‘7.5% இட ஒதுக்கீடு’ நந்தகுமாரின் கடிதத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை: எல்.முருகன் விளக்கம்!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு சட்ட மசோதா, ஆளுநரின் பரிசீலனையில் இருக்கிறது. மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெறவிருப்பதால், ஆளுநர் சட்ட மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இன்று பிற்பகல், 7.5% இட ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

‘7.5% இட ஒதுக்கீடு’ நந்தகுமாரின் கடிதத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை: எல்.முருகன் விளக்கம்!

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை உடைக்கும் வகையில் பாஜக செயல்படுவதாக, இதற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தது. இந்த நிலையில், அந்த கடிதத்துக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பிலேயே அந்த கடிதத்தை எழுதியாக எல்.முருகன் கூறியிருக்கிறார். இதனை ஒப்புக் கொண்ட நந்தகுமார், தான் அந்த கடிதத்தில் பாஜக பெயரை பயன்படுத்தவே இல்லை என தெரிவித்துள்ளார்.