ஆளுங்கட்சியானதும் மாற்றி பேசுவது அழகல்ல… மு.க.ஸ்டாலினை விமர்சித்த எல்.முருகன்!

ஆளுங்கட்சியானதும் மாற்றி பேசுவது அழகல்ல… மு.க.ஸ்டாலினை விமர்சித்த எல்.முருகன்!

கொரோனாவால் இறந்த முன்கள பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

ஆளுங்கட்சியானதும் மாற்றி பேசுவது அழகல்ல… மு.க.ஸ்டாலினை விமர்சித்த எல்.முருகன்!

இது குறித்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ரூ. 25 லட்சம் நிவாரணம் கொடுத்த போது ஒரு கோடி வழங்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கூறியிருந்தார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது அப்படி சொல்லிய ஸ்டாலின், இப்போது ஆளுங்கட்சி ஆனதும் மாற்றி பேசுவது அழகல்ல என்று விமர்சித்தார். மேலும், அவர் அப்போது சொன்னதைப் போலவே உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டுமென தெரிவித்தார்.

ஆளுங்கட்சியானதும் மாற்றி பேசுவது அழகல்ல… மு.க.ஸ்டாலினை விமர்சித்த எல்.முருகன்!

கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் முன்களப்பணியாளர்களின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையை இன்று காலை தமிழக அரசு அறிவித்தது. உயிரிழந்த முன்களப்பணியாளர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படுமென்றும் மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரம், மற்ற பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையாக 3 மாத காலத்திற்கு வழங்கப்படுமென்றும் ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.