அந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் : எல்.முருகன் கோரிக்கை!

 

அந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் : எல்.முருகன் கோரிக்கை!

ஊரடங்கு விதிகளை மீறி ஆட்டோவில் ஒன்றாக பயணித்த அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பில் மகேஷ் மற்றும் எம்.பி தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் பாஜக சார்பில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தற்போது இருக்கும் ஊரடங்கு விதிமுறையின் படி ஆட்டோவில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆனால், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மூவராக பயணித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் : எல்.முருகன் கோரிக்கை!

இதைத் தொடர்ந்து நீட் தேர்வு குறித்து பேசிய அவர், தமிழக அரசு மாணவர்களை குழப்பக் கூடாது. கமிட்டியை கலைத்துவிட்டு மாணவர்களை தேர்வுக்கு தயாராக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. கூட்டணி தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் தடுப்பூசி குறித்து பேசிய அவர், மக்களுக்கு தடுப்புசி மீதான பயத்தை உருவாக்கியது காங்கிரஸ் கட்சி தான். அக்கட்சியின் சிதம்பரம் தற்போது தடுப்பூசி பற்றிய விமர்சனத்தை முன்வைப்பது ஏற்கத்தக்கது அல்ல. அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகம் செய்யக்கூடிய வகையில் மத்திய அரசு தடுப்பூசி தயாரித்து வருகிறது என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.