மோடி போக கூடாதுன்னு சொன்ன ஓவைசியை ராமர் கோயில் பூமி பூஜைக்கு வருமாறு அழைப்பு விடுத்த பா.ஜ.க.

 

மோடி போக கூடாதுன்னு சொன்ன ஓவைசியை ராமர் கோயில் பூமி பூஜைக்கு வருமாறு அழைப்பு விடுத்த பா.ஜ.க.

உலகம் முழுவதும் உள்ள பல கோடி இந்துக்களின் கனவான அயோத்தியில் ராமர் கோயில், வரும் 5ம் தேதி முதல் நனவாக போகிறது. வரும் புதன்கிழமையன்று ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி ராமர் கோயில் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளக் கூடாது என தெரிவித்தார். இதுதவிர தூர்தர்ஷனில் ராமர் கோயில் பூமி பூஜை விழாவை ஒளிபரப்பக் கூடாது என கம்யூனிஸ்ட் கட்சி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது.

மோடி போக கூடாதுன்னு சொன்ன ஓவைசியை ராமர் கோயில் பூமி பூஜைக்கு வருமாறு அழைப்பு விடுத்த பா.ஜ.க.

இந்த சூழ்நிலையில், ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள வருமாறு அசாதுதீன் ஓவைசி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தெலங்கானா பா.ஜ.க. தலைவரும், தலைமை செய்தி தொடர்பாளருமான கிருஷ்ண சாகர் ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற உள்ளது, பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்வதோடு கட்டுமான பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார். உலகம் முழுவதும் உள்ள பல கோடி இந்துக்களின் கனவை எங்களது ஆட்சி காலத்தில் நிஜப்படுத்துகிறோம் என்பதில் பா.ஜ.க. பெருமை கொள்கிறது.

மோடி போக கூடாதுன்னு சொன்ன ஓவைசியை ராமர் கோயில் பூமி பூஜைக்கு வருமாறு அழைப்பு விடுத்த பா.ஜ.க.

ஓவைசியின கருத்து குறித்த கேள்விக்கு, இந்த வகையான ஆதராமற்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆட்சேபனைகளுக்கும் யாரும் பதில் அளிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி அந்த உரிமைக்கு விதிவிலக்கல்ல. ராமர் கோயில் பூமி பூஜைக்கு வருமாறும், கலந்து கொள்ளுமாறும் எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் ஓவைசியையும் நான் அழைக்கிறேன். இதன் மூலம் அவர்கள் தங்களது கட்சியின் மதசார்பின்மை மனப்பான்மையையும், சகோதரத்துவத்தை நோக்கிய தனிநபர் சகிப்புத்தன்மையையும் அவர்களால் வெளிப்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.