தேர்தல்கள், பீகார் மக்கள் காத்திருக்கலாம்.. ஆனால் விடுமுறை முக்கியம்.. ராகுலின் சிம்லா பயணத்தை கிண்டலடித்த பா.ஜ.க.

தேர்தல்கள், பீகார் மக்கள் காத்திருக்கலாம்.. ஆனால் விடுமுறை முக்கியம்.. ராகுலின் சிம்லா பயணத்தை கிண்டலடித்த பா.ஜ.க.

தேர்தல்கள் காத்திருக்கலாம், பீகார் மக்கள் காத்திருக்கலாம் ஆனால் விடுமுறை முக்கியம் என்று ராகுலின் சிம்லா பயணத்தை கிண்டலடித்த பா.ஜ.க. கிண்டலடித்துள்ளது.

பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பீகார் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரென்று சிம்லாவிலிருந்து 12 கி.மீட்டர் தொலைவில் உள்ள சரப்ராவில் தனது சகோதரி பிரியங்கா காந்தி புதிதாக கட்டியுள்ள வீட்டுக்கு ராகுல் காந்தி சென்றார். 2 முதல் 3 தினங்கள் அங்கு அவர் தங்கியிருப்பார் என தகவல்.

தேர்தல்கள், பீகார் மக்கள் காத்திருக்கலாம்.. ஆனால் விடுமுறை முக்கியம்.. ராகுலின் சிம்லா பயணத்தை கிண்டலடித்த பா.ஜ.க.
ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் சிம்லா பயணத்தை பா.ஜ.க. கிண்டலடித்துள்ளது. பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது டிவிட்டரில், ராகுல் காந்தி சலுகைகள், ஒவ்வொரு அரசியல் கட்சியும் மற்றும் அதன் தலைவர்களும் பீகாரில் பிரச்சாரம் செய்கின்றனர். யுவராஜ் சிம்லாவில் விடுமுறை கழிக்கிறார். தேர்தல்கள் காத்திருக்கலாம், பீகார் மக்கள் காத்திருக்கலாம் ஆனால் விடுமுறை முக்கியம். முன்னுரிமை பற்றி பேசுங்கள் என்று பதிவு செய்து இருந்தார்.

தேர்தல்கள், பீகார் மக்கள் காத்திருக்கலாம்.. ஆனால் விடுமுறை முக்கியம்.. ராகுலின் சிம்லா பயணத்தை கிண்டலடித்த பா.ஜ.க.
பிரியங்கா காந்தி

கடந்த 2007ம் ஆண்டில் இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் விர்பத்ரா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் பிரியங்கா காந்திக்காக நில சீர்திருத்தங்கள் மற்றும் குத்தகை சட்டத்தின் 118வது பிரிவின் கீழ் விதிமுறைகளை தளர்த்தி, அவரை நிலத்தை வாங்க அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. இமாச்சல பிரதேச குத்தகை மற்றும் நில சீர்த்திருத்தம் சட்டம் 1972ன் படி, விவசாயிகள் அல்லாதவர்களுக்கு அம்மாநிலத்தில் அரசாங்கத்தின் அனுமதியின்றி நிலம் வாங்க அனுமதி இல்லை. ஒன்பது ஏக்கர் நிலப்பரப்பில் 2 மாடி கட்டிடம் உயர் பாதுகாப்பு மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் கட்டுவதற்காக ராஷ்டிரபதி செயலகத்திலிருந்து தடையில்லா சான்றிதழை பெறவும் அம்மாநில அரசு பிரியங்கா காந்திக்கு உதவியது.