மத்திய பிரதேச இடைத்தேர்தலில் பா.ஜ.க. 18 தொகுதிகளில் வெற்றி பெறும்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு

மத்திய பிரதேச இடைத்தேர்தலில் பா.ஜ.க. 18 தொகுதிகளில் வெற்றி பெறும்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு

மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடந்த 28 சட்டப்பேரவை தொகுதிகளில் பா.ஜ.க. 16 முதல் 18 இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தனர். மேலும் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் இறந்ததால் அம்மாநிலத்தில் மொத்தம் 28 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக இருந்தது. இதனையடுத்து கடந்த 3ம் தேதி காலியாக 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்தியது.

மத்திய பிரதேச இடைத்தேர்தலில் பா.ஜ.க. 18 தொகுதிகளில் வெற்றி பெறும்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு
பா.ஜ.க.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு தற்போது 107 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. ஆனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்க வேண்டும். ஆகையால் இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பா.ஜ.க.வால் ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியும் என்ற நிலை.

மத்திய பிரதேச இடைத்தேர்தலில் பா.ஜ.க. 18 தொகுதிகளில் வெற்றி பெறும்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு
காங்கிரஸ்

அதேசமயம் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 87 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. இதனால் இடைத்தேர்தல் நடைபெற்ற அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்து யோசிக்க முடியும். இந்த சூழ்நிலையில் மத்திய பிரதேச இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. அந்த கருத்து கணிப்புகளின்படி, இடைத்தேர்தலில் பா.ஜ.க. 16 முதல் 18 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும். அதேசமயம் காங்கிரசுக்கு அதிகபட்சம் 11 முதல் 12 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற் வாய்ப்புள்ளது. தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 46 சதவீத வாக்குகளும், காங்கிரசுக்கு 43 சதவீத வாக்குகளும் கிடைத்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.