பொய்களை சொல்வதில் பா.ஜ.க. உலக சாதனை படைத்து வருகிறது…. அகிலேஷ் யாதவ் தாக்கு

பொய்களை சொல்வதில் பா.ஜ.க. உலக சாதனை படைத்து வருகிறது…. அகிலேஷ் யாதவ் தாக்கு

பா.ஜ.க. பீகார், மகாராஷ்டிரா, ஒடிசா என பல மாநிலங்களில் ஆன்லைன் (மெய்நிகர்) வாயிலாக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. இதனை உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கடுமையாக தாக்கி உள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ச்சியான டிவிட்டுகளில் கூறியிருப்பதாவது:

பொய்களை சொல்வதில் பா.ஜ.க. உலக சாதனை படைத்து வருகிறது…. அகிலேஷ் யாதவ் தாக்கு

பீகாரை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உலக சாதனை படைக்க மேற்கு வங்கத்தில் மெய்நிகர் கூட்டத்தில் பல கோடிகள் செலவிடப்பட்டதாக கேள்விப்பட்டேன். இவை ஓட்டுக்கான கூட்டம் அல்ல என்று பா.ஜ.க. கூறுகிறது. அப்புறம் ஏன் பூத் மட்டத்தை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உண்மையில், பா.ஜ.க. பொய்களை சொல்வதில் உலக சாதனை படைத்து வருகிறது.

பொய்களை சொல்வதில் பா.ஜ.க. உலக சாதனை படைத்து வருகிறது…. அகிலேஷ் யாதவ் தாக்கு

கடந்த ஒரு மாதமாக லடாக்கில் உள்ள இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியது தொடர்பாக மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க. அனைத்து முடிவுகளையும் தானாகவே எடுப்பதால், அது சீன ஊடுருவல் பிரச்சினையில் பலகீனமாக இருப்பது போல் உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும், மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அதை ஆதரிக்கின்றன. இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார்.