தமிழகத்தில் பாஜக பலம் கூடி இருக்கிறது – சர்வே முடிவு வந்ததாக எல்.முருகன் பூரிப்பு!

தமிழகத்தில் பாஜக பலம் கூடி இருக்கிறது – சர்வே முடிவு வந்ததாக எல்.முருகன் பூரிப்பு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ளது. இதனால் எந்த கட்சி யாருடன் கூட்டணி, யாருக்கு கூட்டணி பலம் அதிகம் என காரசார விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக பாஜக – அதிமுக கூட்டணி விவாத பொருளாக மாறியுள்ளது.

தமிழகத்தில் பாஜக பலம் கூடி இருக்கிறது – சர்வே முடிவு வந்ததாக எல்.முருகன் பூரிப்பு!

இந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் எல். முருகன், “தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருங்காலம் பாஜகவின் காலம். எங்களின் முழு கவனமும் சட்டமன்ற தேர்தல் மீது உள்ளது அதற்கான பணிகளை நாங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். சட்டமன்ற தேர்தலில் பேரவையில் பாஜக உறுப்பினர்களும் கணிசமான அளவில் இருப்பர். பாரதிய ஜனதா கட்சி கொங்கு மண்டலத்தில் பலம் வாய்ந்ததாக உள்ளது. தமிழகத்தில் தனித்து நின்றாலும் ஜெயிக்க கூடியதாக 60 தொகுதிகளை கண்டறிந்துள்ளோம். தமிழகத்தில் பாஜக பலம் கூடியுள்ளது நாங்கள் நடத்திய சர்வே முடிவில் தெரியவந்துள்ளது” என்றார்.

தமிழகத்தில் பாஜக பலம் கூடி இருக்கிறது – சர்வே முடிவு வந்ததாக எல்.முருகன் பூரிப்பு!

தொடர்ந்து பேசிய அவர், சசிகலா சொத்து முடக்கத்தில் அரசு அதன் கடமையை செய்கிறது. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை என்று கூறினார்.