“பாஜக கூட்டணி வெற்றிபெறும்” – லீக்கான ஆடியோ குறித்து பிரசாந்த் கிஷோர் விளக்கம்!

 

“பாஜக கூட்டணி வெற்றிபெறும்” – லீக்கான ஆடியோ குறித்து பிரசாந்த் கிஷோர் விளக்கம்!

மேற்கு வங்க அரசியல் களத்தில் மம்தாவின் தேர்தல் உத்தி ஆலோசகரான பிரசாந்த் கிஷோருக்கும் பாஜகவுக்கும் நடைபெறும் விவாதம் காரசாராமாக உள்ளது. சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் பேசிய சில ஆடியோ கிளிப்கள் வெளியாகி மேற்கு வங்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

“பாஜக கூட்டணி வெற்றிபெறும்” – லீக்கான ஆடியோ குறித்து பிரசாந்த் கிஷோர் விளக்கம்!

பிரசாந்த் கிஷோர் இணைய வாயிலாக சாட் ரூமில் பத்திரிகையாளர்களுடன் உரையாடல் நிகழ்த்தியிருக்கிறார். அப்போது அவர் பேசிய சில ஆடியோ கிளிப்களை மேற்கு வங்க பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா ட்விட்டரில் வெளியிட்டு பகீர் கிளப்பினார். அந்த ஆடியோக்களில் பிகே, “மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி மம்தாவை விட பிரபலமானவர். நாடு முழுவதும் பல இடங்களில் அவரைக் கடவுளாகப் பாவிக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பலை மிகக்கடுமையாக உள்ளது” என்று பேசியது போல இருந்தது.

“பாஜக கூட்டணி வெற்றிபெறும்” – லீக்கான ஆடியோ குறித்து பிரசாந்த் கிஷோர் விளக்கம்!

இதற்கு அப்போதே எதிர்வினையாற்றிய அவர், “தங்களது கட்சித் தலைவர்கள் பேசியதைக் காட்டிலும் என்னுடைய பேச்சை முக்கியவத்துவம் வாய்ந்ததாக பாஜகவினர் கருதுகிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சி தான். எனது உரையாடலின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு குதூகலிப்பவர்கள், முழுமையான பகுதியையும் சேர்த்து பதிவிடுங்கள். பாஜக 100 இடங்களுக்கு மேல் வெற்றிபெறாது என்பதை மீண்டும் ஒருமுறை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்று ட்வீட் செய்திருந்தார்.

தற்போது தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், “மேற்குவங்கத்தில் பாஜக ஒரு வலிமையான அரசியல் சக்தி தான். நான் அக்கட்சியின் வீச்சைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால், இந்தத் தேர்தலில் திருணாமூல் காங்கிரஸ் கட்சிதான் அங்கு ஆட்சியைப் பிடிக்கும். பாஜக 100 இடங்களைத் தாண்டாது என்றுதான் அந்த உரையாடலில் கூறியிருந்தேன். ஆனால் பாஜக வலிமையாக இருக்கிறது என்று நான் சொன்னது மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

prashant kishor: Latest News, Videos and prashant kishor Photos | Times of  India

வலிமையாக இருப்பதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் இடையே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. தேர்தலில் திருணாமுல் ஆட்சியைத் தக்கவைக்காவிட்டால் நான் எனது பணியிலிருந்தே விலகிக் கொள்கிறேன். அக்கட்சியின் வாங்குவங்கி 45 சதவீதத்துக்கும் மேலானது. மேற்கு வங்கத்தில் இன்னமும் மம்தா பானர்ஜி மக்களின் அன்பை, மதிப்பை, நம்பிக்கையைப் பெற்ற தலைவராகவே இருக்கிறார். அதுவும் அவர் பெண்களின் அபிமானம் பெற்ற தலைவராக இருக்கிறார்” என்றார்.