தேவேந்திர பட்னாவிஸ் பிறந்த நாளுக்கு பேனர் வைக்காதீங்க.. மக்களுக்கு சேவையாற்றுங்க.. பா.ஜ.க. வலியுறுத்தல்

தேவேந்திர பட்னாவிஸ் பிறந்த நாளுக்கு பேனர் வைக்காதீங்க.. மக்களுக்கு சேவையாற்றுங்க.. பா.ஜ.க. வலியுறுத்தல்

மகாராஷ்டிரா பா.ஜ.க.வின் இளம் தலைவர் மற்றும் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். வரும் 22ம் தேதியன்று தேவேந்திர பட்னாவிஸ் 50 வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது பிறந்த நாளை பா.ஜ.க. தொண்டர்கள் விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் பிறந்த நாளுக்கு பேனர்கள் வைக்கக் கூடாது என தொண்டர்களை பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ் பிறந்த நாளுக்கு பேனர் வைக்காதீங்க.. மக்களுக்கு சேவையாற்றுங்க.. பா.ஜ.க. வலியுறுத்தல்

மகாராஷ்டிரா பா.ஜ.க. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பிறந்தநாளை முன்னிட்டு பதாகைகள், பேனர்கள் மற்றும் விழாக்கள் ஏற்பாடு செய்வதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும். மாநிலத்தின் மக்களுக்காக சேவையாற்றுங்க என அதில் வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்த்து மக்களுக்கு சேவையாற்றும்படி தொண்டர்களுக்கு பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ் பிறந்த நாளுக்கு பேனர் வைக்காதீங்க.. மக்களுக்கு சேவையாற்றுங்க.. பா.ஜ.க. வலியுறுத்தல்

தற்போது மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் டெல்லி சென்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தார். அப்போது, கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தொண்டர்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து நட்டாவிடம் அவரிடம் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனா வைரஸால் 3.10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.