‘அந்த 3 வேட்பாளர்கள்’ மீண்டும் இந்தியில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

 

‘அந்த 3 வேட்பாளர்கள்’  மீண்டும் இந்தியில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

தமிழகத்தில் மேலும் 3 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘அந்த 3 வேட்பாளர்கள்’  மீண்டும் இந்தியில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இருப்பினும் மூன்று தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் இருந்தது. உதகமண்டலம் ,தளி, விளவங்கோடு உள்ளிட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்வி பெரும்பாலும் எழுந்தன.

‘அந்த 3 வேட்பாளர்கள்’  மீண்டும் இந்தியில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

இந்நிலையில் பாஜக 2ம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பில் தளி தொகுதியில் நாகேஷ்குமார்,
விளவங்கோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணியை எதிர்த்து ஜெயசீலன் களமிறக்கப்பட்டுள்ளார்.
உதகமண்டலம் தொகுதியில் போஜராஜன் களம் காண்கிறார்.

‘அந்த 3 வேட்பாளர்கள்’  மீண்டும் இந்தியில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

முன்னதாக திருவண்ணாமலை- தணிகைவேல்,நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி குளச்சல் – ரமேஷ்,ராமநாதபுரம் – குப்புராம்,மொடக்குறிச்சி- சி.கே.சரஸ்வதி,துறைமுகம் – வினோஜ் பி செல்வம்,ஆயிரம் விளக்கு – குஷ்பு, திருக்கோவிலூர் – கலிவரதன்,திட்டக்குடி (தனி)- பெரியசாமி கோவை தெற்கு- வானதி சீனிவாசன்,விருதுநகர் – பாண்டுரங்கன்,அரவக்குறிச்சி – அண்ணாமலை, திருவையாறு – பூண்டி எஸ்.வெங்கடேசன்,திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
காரைக்குடி – ஹெச்.ராஜா,தாராபுரம் (தனி) – எல்.முருகன், மதுரை வடக்கு – சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான 17 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் இந்தியில் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த முறையும் வேட்பாளர் பட்டியல் இந்தியில் வெளியாகியுள்ளது