நாளை மறுநாள் ராஜ்யசபா தேர்தல்…..காங்கிரஸை தொடர்ந்து ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் ஜெய்ப்பூர் ஹோட்டலுக்கு மாற்றம்…

நாளை மறுநாள் ராஜ்யசபா தேர்தல்…..காங்கிரஸை தொடர்ந்து ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் ஜெய்ப்பூர் ஹோட்டலுக்கு மாற்றம்…

ராஜஸ்தானில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ராஜஸ்தான் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. மேலும் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. பக்கம் தாவி விடமால் இருக்க ஜெய்ப்பூரில் உள்ள ஜே.டபிள்யூ மேரியட் ஹோட்டலில் தங்க வைத்துள்ளது.

நாளை மறுநாள் ராஜ்யசபா தேர்தல்…..காங்கிரஸை தொடர்ந்து ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் ஜெய்ப்பூர் ஹோட்டலுக்கு மாற்றம்…

இந்த நிலையில், நேற்று ராஜஸ்தான் பா.ஜ.க.வும் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை ஜெய்ப்பூரில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு மாற்றப்பட்டார்கள். இது தொடர்பாக ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் சதிஷ் பூனியா நேற்று கூறுகையில், எங்கள் எம்.எல்.ஏ.களுக்கு வாக்களிப்பு மற்றும் சட்ட விஷயங்கள் தொடர்பாக பயிற்சி அளிப்பதற்காக ஹோட்டலுக்கு மாற்றப்படுகிறார்கள் என தெரிவித்தார். ஆனால் பா.ஜ.க.வின் இந்த நடவடிக்கை, எதிர் (காங்கிரஸ்) முகாமிலிருந்து தங்களது எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை செயலாகவே தெரிகிறது.

நாளை மறுநாள் ராஜ்யசபா தேர்தல்…..காங்கிரஸை தொடர்ந்து ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் ஜெய்ப்பூர் ஹோட்டலுக்கு மாற்றம்…

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 18 இடங்கள் காலியாக உள்ளன. இதில் ஆந்திர பிரேதம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு தலா 4 இடங்களும், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்துக்கு தலா 3 இடங்களும், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 2 இடங்களும், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு தலா ஒரு மாநிலங்களவை இடமும் அடங்கும். இவற்றுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.