ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைன்னு சொன்னாங்க.. ஆனால் பதவிக்கு வந்ததும் மோடி மறந்து விட்டார்.. காங்கிரஸ்

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைன்னு சொன்னாங்க.. ஆனால் பதவிக்கு வந்ததும் மோடி மறந்து விட்டார்.. காங்கிரஸ்

நம் நாட்டின் பாரம்பரிய மிக்க அரசியல் கட்சியான காங்கிரசின் ஒரு பிரிவான இந்திய இளைஞர் காங்கிரசின் நிறுவிய தினம் நேற்று. தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் இந்திய இளைஞர் காங்கிரஸ் நிறுவன தினத்தில் இளைஞரணி காங்கிரசார் ‘வேலை கொடுங்க’ பிரச்சாரத்தை தொடங்கினர். வேலையின்மை தொடர்பாக பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராட இளைஞர்கள் உறுதி மொழி எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைன்னு சொன்னாங்க.. ஆனால் பதவிக்கு வந்ததும் மோடி மறந்து விட்டார்.. காங்கிரஸ்

இது தொடர்பாக தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் பொன்னம் பிரபாகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டின் வேலையின்மை அதிகரித்துள்ளதால் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வுக்கு எதிராக போராட நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களும் உறுதி மொழி எடுக்க வேண்டும். இந்த உறுதிமொழியை இளைஞர் காங்கிரசார் எடுப்பது கட்டாயம், பா.ஜ.க. அரசு ஆட்சி காலத்தில் வேலையின்மை அதிகரித்து விட்டது மற்றும் வேலைவாய்ப்புக்கான வயது உச்சவரம்பையும் இளைஞர்கள் தாண்டி விட்டனர்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைன்னு சொன்னாங்க.. ஆனால் பதவிக்கு வந்ததும் மோடி மறந்து விட்டார்.. காங்கிரஸ்

பா.ஜ.க. அரசு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அவர் அதனை மறந்து விட்டார். இன்று அவர்களின் கொள்கைகள் காரணமாக அனைத்து பொது அமைப்புகளும் தனியார்மயமாக்கப்படுகின்றன. ஆகையால், ஆகஸ்ட் 9ம் தேதியன்று (நேற்று) நாட்டின் அனைத்து இளைஞர்களும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராடுவார்கள் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.