மம்தா ஆட்சியில் தேர்தலை நியாயமாக நடத்த முடியாது.. குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்க… பா.ஜ.க.

 

மம்தா ஆட்சியில் தேர்தலை நியாயமாக நடத்த முடியாது.. குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்க… பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியல் தேர்தலை சுதந்திரமாக, நியாயமாக நடத்த முடியாது என்பதால் அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

பா.ஜ.க.வின் பொது செயலாளர்களில் ஒருவரும், மேற்கு வங்க பா.ஜ.க.வுக்கான மத்திய பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்ஜியா செய்தியாளர்களுடன் சந்திப்பு நடத்தினார். அப்போது மேற்கு வங்கம், பீகார் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது: இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு வன்முறைக்கு இடமில்லை. தேர்தல் நடவடிக்கைகள் வாயிலாக வன்முறை சம்பவங்களில் ஈடுட்ட நபர்களை நம்மால் தோற்கடிக்க முடியும்.

மம்தா ஆட்சியில் தேர்தலை நியாயமாக நடத்த முடியாது.. குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்க… பா.ஜ.க.
கைலாஷ் விஜய்வர்ஜியா

எதிர்வரும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில், வன்முறை அரசியலுக்கு எதிராக பெங்காலின் மக்கள் எழுந்து நிற்பார்கள். குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஆனால் மத்திய அரசுதான் இந்த முடிவு எடுக்க வேண்டும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் தெரிவித்துள்ளோம். தற்போதைய சூழலில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்த முடியாது. மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது அல்லது உள்ளூர் நிர்வாகத்தால் மட்டுமே சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்த முடியும்.

மம்தா ஆட்சியில் தேர்தலை நியாயமாக நடத்த முடியாது.. குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்க… பா.ஜ.க.
இந்திய தேர்தல் ஆணையம்

பீகாரில் புதிய அரசியல் தொடங்கியுள்ளது. நிதிஷ் குமார் தலைமையின் கீழ் அம்மாநிலம் வளர்ச்சி அடையும். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து இப்போது சொல்வது சரியாக இருக்காது. ஆனால் அங்கு அரசு செயல்படும் விதத்தால், மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக மக்களிடம் கொந்தளிப்பு உள்ளது. எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதை என்னால் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.