ராகுல் காந்தி தீவிரமற்ற அரசியல்வாதி.. காங்கிரஸ் அல்லாத பாரதத்தை நோக்கி சூழ்நிலைகள் உருவாகி வருகிறது.. பா.ஜ.க.

ராகுல் காந்தி தீவிரமற்ற அரசியல்வாதி.. காங்கிரஸ் அல்லாத பாரதத்தை நோக்கி சூழ்நிலைகள் உருவாகி வருகிறது.. பா.ஜ.க.

ராகுல் காந்தி ஒரு தீவிரமற்ற அரசியல்வாதி என்று பா.ஜ.க. பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், மேற்கு வங்க பா.ஜ.க. பொறுப்பாளருமான விஜய்வர்கியா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் பல கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்தார். ஜோதிராதித்யா சிந்தியா மீண்டும் காங்கிரசுக்கு வருவார் என்று ராகுல் காந்தி கூறியது குறித்து, ராகுல் காந்தி ஒரு தீவிரமற்ற அரசியல்வாதி, அவரது கருத்து குறித்து நான் பதில் தெரிவிக்க விரும்பவில்லை என விஜய்வர்கியா தெரிவித்தார்.

ராகுல் காந்தி தீவிரமற்ற அரசியல்வாதி.. காங்கிரஸ் அல்லாத பாரதத்தை நோக்கி சூழ்நிலைகள் உருவாகி வருகிறது.. பா.ஜ.க.
கைலாஷ் விஜய்வர்கியா

மேற்கு வங்க முதல்வர் சாந்தி பாத் பாராயணம் செய்து குறித்து கேள்விக்கு, தேர்தல் நெருங்குவதால் அவர் அதனை செய்தார் என்று பதில் அளித்தார். கேரளாவில் மூத்த காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ அந்த கட்சியிலிருந்து விலகியதை, காங்கிரஸ் பெரிய பிரச்சினையில் உள்ளது. காங்கிரஸ் இல்லாத பாரதத்தை நோக்கி சூழ்நிலைகள் உருவாகி வருகிறது என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி தீவிரமற்ற அரசியல்வாதி.. காங்கிரஸ் அல்லாத பாரதத்தை நோக்கி சூழ்நிலைகள் உருவாகி வருகிறது.. பா.ஜ.க.
ஜோதிராதித்ய சிந்தியா

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்கட்கிழமையன்று இளைஞர் காங்கிரஸ் பிரிவு நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது: காங்கிரசுடன் இருந்திருந்தால் அவர் (ஜோதிராதித்ய சிந்தியா) முதல்வராகி இருக்கலாம். ஆனால் சிந்தியா பா.ஜ.க.வில் பேக் பெஞ்சராகி விட்டார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அங்கு (பா.ஜ.க.) அவர் போதும் முதல்வராக முடியாது. அதற்காக அவர் இங்கு மீண்டும் திரும்பி வருவார். இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார்.