‘ஓபிஎஸ்ஸே அதுக்கு கவலை படல’ : இல.கணேசன் பதிலடி!

 

‘ஓபிஎஸ்ஸே அதுக்கு கவலை படல’ : இல.கணேசன் பதிலடி!

பிரதமர் மோடி முதல்வரை தனியாக சந்திதற்கு ஓபிஎஸ் கவலைப்படவில்லை என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்தார். அவருக்கு அதிமுகவினரும் பாஜகவினரும் பலத்த வரவேற்பு அளித்தனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.8000 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கரங்களை பிடித்து உயர்த்தி, நாளை நமதே என்பதை குறிப்பால் உணர்த்தி விட்டுச் சென்றார்.

‘ஓபிஎஸ்ஸே அதுக்கு கவலை படல’ : இல.கணேசன் பதிலடி!

இதனிடையே சென்னையில் இருந்து கிளம்பும் போது, முதல்வர் பழனிசாமியை கிரீன் ரூமில் தனியாக சந்தித்து பேசினார் பிரதமர் மோடி. தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது. அதிமுகவில் எடப்பாடிக்கு சமமாக தலைமை வகிக்கும் ஓபிஎஸ், இந்த ஆலோசனையில் பங்கேற்காதது குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. ஓபிஎஸ்ஸை விட்டு ஈபிஎஸ் உடன் மட்டும் மோடி அப்படி என்ன ஆலோசித்தார் என்பதே பேசு பொருளாக இருக்கிறது.

‘ஓபிஎஸ்ஸே அதுக்கு கவலை படல’ : இல.கணேசன் பதிலடி!

இந்த நிலையில், பிரதமரை முதல்வர் தனியாக சந்தித்ததற்கு ஓபிஎஸ்ஸே கவலைப் படாத போது மற்றவர்கள் ஏன் அதனை சிந்திக்க வேண்டும்? என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல; அவர்கள் இடைத்தரகர்கள் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.