• March
    29
    Sunday

Main Area

Main



மகாராஷ்டிரா சறுக்கலை கர்நாடகத்தில் சரி செய்த பா.ஜ.க! இடைத்தேர்தலில் தொகுதிகளை அள்ளிய எடியூரப்பா

எடியூரப்பா
எடியூரப்பா

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. 
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் குமாரசாமியை ஆதரிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. குமாரசாமி ஆட்சி அமைத்தார். ஆனால், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க இழுத்து ஆட்சியைக் கவிழ்த்தது.

bangalore

அணி மாறிய 17 எம்.எல்.ஏ-க்களின் பதவியும் பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 15 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், 12 இடங்களில் பா.ஜ.க அமோக வெற்றி பெறும் நிலை உள்ளது. இந்த 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இப்போது காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
எடியூரப்பா ஆட்சியைத் தக்கவைக்க கூடுதலாக ஐந்து எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. இப்போது, 12 தொகுதிகளில் அது வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கர்நாடக பா.ஜ.க ஆட்சியை இனி யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

modi

மகாராஷ்டிராவில் அதிக இடங்களில் வெற்றி பெற்றும் பாரதிய ஜனதாவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஃபட்னாவிஸ் முதல்வராக பதவி ஏற்று 2 நாளில் பதவியில் இருந்து இறங்கினார். இதனால், சேர்ந்து போயிருந்த பா.ஜ.க தொண்டர்களுக்கு இந்த வெற்றி மிகப்பெரிய டானிக்காக அமைந்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.