“நடிகை ஓவியா தேசத்துரோகம் செய்துவிட்டார்”

 

“நடிகை ஓவியா தேசத்துரோகம் செய்துவிட்டார்”

தமிழகத்திற்குப் பிரதமர் மோடி வருவதும், அவர் வருவதற்கு ஒருநாள் முன்பே #gobackmodi என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் அடிப்பதும் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு வாழ்க்கையாக இயைந்துபோய்விட்டது. பிரதமர் நேற்றும் சென்னைக்கு விஜயம் செய்தார். வழக்கம்போலவே அந்த ஹேஸ்டேக் நேற்று முன்தினமே ஹிட்டடித்தது. வீட்டுப் பிரச்சினையை ட்விட்டரில் போட்டு கீழே அந்த ஹேஸ்டேக்கை போட்டுவிடுகிறார்கள் படுபாவி நெட்டிசன்கள்.

Image result for oviya spray

எப்போதும் எதிர்க்கட்சித் தலைவர்களும், அவர்களது தொண்டர்களும் பெரும்பான்மையான தமிழ் மக்களும் இந்த ஹேஸ்டேக்கை பதிவிடுவார்கள். ஆனால், இம்முறை வழக்கத்திற்கு மாறாக பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா, #gobackmodi என்று ட்வீட் செய்தார். இதனால் நெட்டிசன்களின் அமோக ஆதரவை அவர் பெற்றார். அதேசமயம் பாஜக ஆதரவாளர்களின் வசைச்சொற்களிலும் அவர் சிக்குண்டார். ஓவியாவை 5 லட்சத்து 51 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். அவரது மோடி எதிர்ப்பு பதிவை 19.8 ஆயிரம் பேர் ரீ-ட்வீட் செய்துள்ளனர். 58.7 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

“நடிகை ஓவியா தேசத்துரோகம் செய்துவிட்டார்”

இச்சூழலில் சிபிசிஐடி சைபர் பிரிவிடம் பாஜக சார்பில் ஓவியா மீது புகார் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் என்பவர் சிபிஐசிஐடி அலுவலகத்தின் சைபர் பிரிவுக்கு ஒரு புகாரை அனுப்பிருக்கிறார். அப்புகாரில் பிரதமர் மோடியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ட்வீட் செய்ததால், ஓவியா மீது தேசத்துரோகம், அவதூறு உள்ளிட்ட வழக்குகள் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

“நடிகை ஓவியா தேசத்துரோகம் செய்துவிட்டார்”

இந்த ஹேஸ்டேக்கை பதிவிட்டதற்காக ஓவியா மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இதே ஹேஸ்டேக்கை பல லட்சம் பேர் பதிவிட்டிருக்கிறார்கள். அப்போ அவங்க எல்லார் மேலயும் கேஸ் கொடுப்பீங்களா என்ற கேள்வியெழுந்துள்ளது.