சிவசேனாவுடன் கூட்டணி… விருப்பம் தெரிவித்த பா.ஜ.க! – அதிர்ச்சியில் காங்கிரஸ்

 

சிவசேனாவுடன் கூட்டணி… விருப்பம் தெரிவித்த பா.ஜ.க! – அதிர்ச்சியில் காங்கிரஸ்

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா கட்சி விருப்பம் தெரிவித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சிக்கு பாரதிய ஜனதா முயற்சி செய்தது. ஆனால், முதல்

சிவசேனாவுடன் கூட்டணி… விருப்பம் தெரிவித்த பா.ஜ.க! – அதிர்ச்சியில் காங்கிரஸ்

இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பொறுப்பை சிவசேனாவுக்கு வழங்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே நிபந்தனை விதித்ததால் கூட்டணி முறிவுற்றது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது சிவசேனா.
கொள்கை அளவில் இந்த கூட்டணிக்குள் குழப்பம். இதனால் பொருந்தாத கூட்டணி அரசாகவே மகாராஷ்டிரா அரசு நீடித்து வருகிறது. மகாராஷ்டிராவை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆபரேஷன் லோட்டஸ் மகாராஷ்டிராவிலும் செயல்படுத்தத் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியானது.

சிவசேனாவுடன் கூட்டணி… விருப்பம் தெரிவித்த பா.ஜ.க! – அதிர்ச்சியில் காங்கிரஸ்
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பா.ஜ.க இதுவரை ஆலோசனை நடத்தவில்லை. ஆனாலும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அப்படி ஒரு சூழல் உருவானால் சிவசேனாவுடன் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சியமைக்க பா.ஜ.க தயாராக உள்ளது. இரண்டு கட்சிகளும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவை. எனவே, கூட்டணி அமைவதால் எந்த சிக்கலும் இருக்காது. எதிர்காலத்தில் கூட்டணி அமைந்தாலும் தேர்தலில் தனித்தே பா.ஜ.க களம் காணும்” என்றார்.
ஆட்சியமைக்க சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்று பா.ஜ.க வெளிப்படையாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.